அண்மைய செய்திகள்

recent
-

மாதவிடாய் நேரத்தில் மார்பகத்தில் வலியா? இதை சாப்பிடுங்கள் -


மாதவிடாய் காலத்தில் உண்டாகும் ஹார்மோன் மாற்றங்களினால் மாதவிடாய் வருவதற்கும் ஒருசில நாட்கள் முன்னதாக சிலருக்கு மார்பகத்தில் வலி ஏற்படும்.
இவ்வாறு மாதவிடாய் காலத்தில் வரும் மார்பக வலியில் இருந்து தப்பிக்க சில இயற்கை வைத்திய முறைகள் இதோ,
மாதவிடாய் காலத்தின் மார்பக வலியை போக்குவது எப்படி?
  • மாதவிலக்கு நேரங்களில் ஏற்படும் மார்பக வலியைக் குறைக்க சுடுதண்ணீர் ஒத்தடம் அல்லது உளுந்தை அரைத்து பற்று போடலாம்.
  • இளஞ்சூடான தண்ணீரை பருகலாம் அல்லது டீ போன்ற ஏதேனும் ஒரு சூடான திரவ ஆகாரத்தை குடிக்கலாம்.
  • ஒரு துணியில் ஐஸ்கட்டிகளை போட்டு, அதை மார்பக பகுதியில் 10-20 நிமிடங்கள் ஒத்தடம் கொடுக்கலாம்.
  • ஒரு டம்ளர் பாலில் 6-8 பொடியாக நறுக்கிய பூண்டுகளை போட்டு சூடாக்கி பூண்டுடன் சேர்த்து குடிக்க வேண்டும்.
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூளை 1 டம்ளர் பாலில் கலந்து சூடாக்கி அதில் 2 டீஸ்பூன் தேன் மற்றும் சிறிதளவு மிளகுத்தூள் கலந்து குடிக்க வேண்டும்.
  • ஒரு துளி பேக்கிங் சோடாவை 1 கப் சூடான தண்ணீரில் கலந்து, குடித்தால் மார்பக வலியில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.
  • விளக்கெண்ணெய் மற்றும் ஆலிவ் ஆயிலை ஒன்றாக கலந்து மார்பக பகுதிகளில் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.
  • சிறிதளவு சீரகத்தை 1 டம்ளர் தண்ணீரில் போட்டு காய்ச்சி சீரகத்தை வடிகட்டி அந்த சீரக நீரை மட்டும் குடிக்க வேண்டும்.
  • மாதவிடாய் காலத்தில் வரும் மார்பக வலியை தடுக்க இளநீர் அல்லது வாழைப்பழத்தை சாப்பிட்டால் நல்ல பலனை பெறலாம்.
  • முருங்கைக் கீரையுடன் சிறிது கருப்பு எள் சேர்த்து கஷாயமாக்கி ஒரு வாரம் தொடர்ந்து சாப்பிட்டால் தடைபட்ட மாதவிலக்கு சரியாகும்.
  • உலர்ந்த புதினா இலையோடு 1 ஸ்பூன் கருப்பு எள் சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டால் மாதவிலக்குக் கோளாறுகள் குணமாகும்.
  • கொத்தமல்லி சாறில் கருஞ்சீரகத்தை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, அதில் தினமும் 1 கிராம் அளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டால் மாதவிலக்குக் கோளாறுகள் குணமாகும்.
  • இலந்தை இலை, மாதுளை இலை ஆகிய இரண்டையும் ஒவ்வொரு கைப்பிடி எடுத்து கஷாயம் செய்து 200 மில்லி அளவு காலையில் குடிக்க வேண்டும்.
மாதவிடாய் நேரத்தில் மார்பகத்தில் வலியா? இதை சாப்பிடுங்கள் - Reviewed by Author on December 06, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.