அண்மைய செய்திகள்

recent
-

115 ஆண்டுகால சாதனையை தகர்த்த கிரான்ட்ஹோம்: புதிய உலக சாதனை -


நியூசிலாந்து - வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நடந்து முடிந்துள்ளது. இப் போட்டியில் நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது.

நியூசிலாந்து சார்பில் 7-வது வரிசையில் ஆடிய ஆல்-ரவுண்டர் காலின் டி கிரான்ட்ஹோம் 71 பந்துகளில் தனது 'கன்னி' சதத்தை எட்டியதுடன் 105 ரன்கள் (74 பந்துஇ 11 பவுண்டரிஇ 3 சிக்சர்) விளாசி கேட்ச் ஆனார். நியூசிலாந்து வீரர்களில் 2-வது மின்னல்வேக சதம் இது தான்.

அத்துடன் முதல் சதத்தை அதிவேகமாக எட்டிய வீரர் என்ற சிறப்புக்கும் சொந்தக்காரர் ஆனார். இதற்கு முன்பு இங்கிலாந்தின் கில்பெர்ட் ஜெசோப் 1902-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதராக தனது முதல் சதத்தை 76 பந்துகளில் கடந்ததே இந்த வகையில் சாதனையாக இருந்தது. அந்த 115 ஆண்டு கால சாதனையை கிரான்ட்ஹோம் முறியடித்தார். 31 வயதான கிரான்ட்ஹோமுக்கு இது 7-வது டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
115 ஆண்டுகால சாதனையை தகர்த்த கிரான்ட்ஹோம்: புதிய உலக சாதனை - Reviewed by Author on December 06, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.