அண்மைய செய்திகள்

recent
-

தமிழ் தேசியக்கூட்டமைப்பானது அரசுடன் ஆதரவை பேணி வருவம் காரணத்தினாலேயே கொள்கை ரீதியாக விரிசல்கள் ஏற்பட்டுள்ளது-எஸ்.ஆர்.குமரேஸ்-EPRLF



தமிழரசுக்கட்சியை தவிர்ந்த ஏனை அமைப்புக்கள் கடந்த காலங்களில் ஆயுதம் தூக்கி போராடிய அமைப்புக்கள். ஆனால் அந்த அமைப்புக்களை கொச்சைப்படுத்தும் வகையில் செயற்படுபவர்கள், எதிராக அறிக்கைகளை விடுபவர்கள் அந்த அமைப்புகளினூடாகவே அரசியலினுள் உற்பிரவேசித்துள்ளனர் என்பதனை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ் தெரிவித்துள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை(28) மாலை மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்துதெரிவிக்கையில்,,,,

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியானது(ஈ.பி.ஆர்.எல்.எப்) கடந்த காலங்களில் தமிழ் தேசியக்கூட்டமைப்பினூடாக கடந்த 17 வருடங்களுக்கு மேலாக எமது அரசியல் பயணத்தை மேற்கொண்டு வந்துள்ளோம்.

அதன் அடிப்படையில் இதுவரை காலமும் 2001 ஆம் ஆண்டு தொடக்கம் 2015 ஆம் ஆண்டு வரைக்குமான காலப்பகுதியில் ஆட்சியில் இருந்த அரசிற்கு எந்த விதமான ஆதரவோ அல்லது வரவு செலவு திட்டத்திற்கான ஆதரவோ வழங்கிய சந்தர்ப்பம் கிடையாது.

-நாங்கள் தமிழ் மக்களின் நலன் கருதி அரசுடனான உரிமைகளை பெற்றுக்கொள்ளுவதற்காக நாங்கள் போரடியுள்ளதே தவிர அரசிற்கு ஆதரவு வழங்கிய வரலாறு இது வரை தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கும் சரி,அதில் அங்கம் வகித்த எமது கட்சிக்கும் கிடையாது.

-இன்று நல்லாட்சி என்று வந்ததன் பிற்பாடு தமிழ் தேசியக்கூட்டமைப்பானது அரசுடன் ஆதரவை பேணி வருவம் காரணத்தினாலேயே எங்களுக்கிடையில் கொள்கை ரீதியாக விரிசல்கள் ஏற்பட்டுள்ளமை உண்மை.

அதன் அடிப்படையில் நாங்கள் தொடர்ச்சியாக கட்சிக்குள் இருந்து கொண்டே தமிழ் தேசியக்கூட்டமைப்பை மக்கள் நலன் சார்ந்ததாக போகக்கூடிய வகையில் நாங்கள் தொடர்ச்சியாக கட்சிக்கு உள்ளேயும்,வெளியேயும் ஜனநாயக ரீதியில் போராடி வந்தோம்.

-அந்த போராட்டமானது பலனற்ற நிலையில் கொள்கை ரீதியாக நாங்கள் கொள்கையுடன் உடன் பட்டவர்களை தொடர்பு கொண்டு  புத்தி ஜீவிகள்,பல அரசியல் கட்சி தலைவர்கள் ஆகியோரை தொடர்பு கொண்டு மக்களின் நலன் கருதி மக்களின் கோரிக்கைகளுக்கு அமைவாக செயற்படக்கூடிய ஒரு கூட்டை உறுவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் இன்று நாங்கள் 'தமிழ் தேசிய விடுதலைக்கூட்டமைப்பை' உறுவாக்கியுள்ளோம்.

-சில பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறுகின்றார்கள் நாங்கள் கொள்கையுடன் பிரியவில்லை என்று தெரிவிக்கின்றனர்.கடந்த இடைக்கால அறிக்கை தொடர்பாக தொடர்ச்சியாக எமது பாராளுடன்ற உறுப்பினர் குறித்த இடைக்கால அறிக்கையில் தமிழர்களுக்கான எந்த ஒரு நன்மையும் இல்லை என்பதை தெரிவித்து வந்ததன் அடிப்படையில் அவருக்கு பாராளுமன்றத்தில் உரையாற்றுவதற்கான அனுமதி கூட வழங்கப்படவில்லை.

அதே போன்று கடந்த மூன்று ஆண்டுகளும் தமிழ் தேசியக்கூட்டமைப்பானது வரவு செலவு திடடத்திற்கு ஆதரவு வழங்கி வந்துள்ள நிலையில் எமது கட்சியானது தொடர்ச்சியாக ஆதரவை வழங்காமல் எதிர்த்து வந்திருக்கின்றது.

ஆனால் சிலர் கூறுகின்றனர் கடந்த காலங்களில் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்கள் மஹிந்த ராஜபக்ஸ காலத்தில் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு வழங்கியதாக புதிய பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

குறித்த புதிய பாராளுமன்ற உறுப்பினருக்கு கடந்த காலங்களில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நடவடிக்கைகள், பாராளுமன்ற நடவடிக்கைகள் தெரியாமல் இருந்திருக்கலாம்.

-ஆனால் அவற்றை தமது தலைவர்களிடம் அல்லது கட்சியிடம் கேட்டு அறிந்திருக்க முடியும்.அலல்து பாராளுமன்ற கன்ஸாட்டில் பார்த்திருக்க வேண்டும்.

-உண்மையை அறிந்து கொள்ளாது ஒரு சிறு பிள்ளைத்தனமாக வெறுமனே சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்களை குற்றம் சாட்டுவதாக கூறி ஒட்டு மொத்த தமிழ் தேசியக்கூட்டமைப்பையும் அவர் குற்றம் சாட்டியுள்ளார் என்பது வெக்கக்கேடான விடையமாகவே நாங்கள் பார்க்கின்றோம்.

-கடந்த வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு வழங்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனாந்தன் கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தன் அவர்களுக்கு எடுத்துக் கூறிய போது கூட இருந்த சுமார் 8 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு வழங்க முடியாது என எதிர்த்தார்கள்.

-குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன் மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் போன்றவர்களும் தமது பதவிகள் போனாலும் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு வழங்க மாட்டோம் சிவசக்தி ஆனந்தனுடன் இணைந்து தெரிவித்திருந்தனர்.

-உடனடியாக சம்மந்தன் அவர்களுக்கும்,ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட இரகசிய சந்திப்பின் பின்னர் திடீர் என இவர்களுக்கு அபிவிருத்தி என்ற போர்வையில் தலா 2 கோடிரூபாய் வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்ட நிலையில் குறித்த பணத்தை பெற்றுக்கொண்டு உடனடியாகவே கொள்கை பேசியவர்கள்,பதிவி போனாலும் ஆதரவு வழங்க மாட்டோம் என்று கூறியவர்கள் தலைகீழாக குத்துக்கரனம் அடித்து வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவழித்து 2 கோடி ரூபாய் பணத்தையும் பெற்றுள்ளனர்.
உதாரணத்திற்கு மன்னார் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் அவர்கள் பெற்ற 2 கோடி ரூபாய் பணங்களில் ஒவ்வெரு கிராமங்களுக்கும், குறிப்பாக தனது கட்சிக்காரர்கள் போட்டியிடுகின்ற சில பெரிய கிராமங்களுக்கு சுமார் 15 இலட்சம் ரூபாய் வரை வழங்கியுள்ளார்.

அது தான் உண்மை.அவர் ஏதோ பாராளுமன்றத்தில் 15 வருடம்,20 வருடத்திற்கு மேல் அரசியலில் இருந்தது போன்று பேசுகின்றார்.

மேலும் வெக்கக்கேடான ஒரு செயல்  பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது தரம் என்ன ? அதிலிருந்து தான் கீழ் இறங்க முடியாது என்ற சிந்தனை அவருக்கு இருந்திருக்க வேண்டும்.

கடந்த காலங்களை அறியாமல், தான் யார் என்பதைக்கூட அறியாமல் கடந்த காலங்களில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு சரியான நிலைப்பாட்டுடன் நடந்ததை அறியாமல் சிறு பிள்ளைத்தனமாக அவர் பேசியுள்ளார்.
தமிழரசுக்கட்சி தவிர்ந்த ஏனை அமைப்புக்கள் கடந்த காலங்களில் ஆயுதம் தூக்கி போராடிய அமைப்புக்கள்.

ஆனால் அந்த அமைப்புக்களை கொச்சைப்படுத்தும் வகையில் சாள்ஸ் நிர்மலநாதன் போன்றோர் செயற்படுகின்றனர்.எம்மைப்போன்ற ஆயுத வழிகளில் வந்தவர்களினூடாகவே அவர்கள் அரசியலினுள் காலடி எடுத்து வைத்துள்ளார்கள் என்பதை அவர்கள் சற்று சிந்தித்து பார்க்க வேண்டும்.எனவே ஆயுதம் தூக்கி யோராடிய கட்சிகளுக்கு எதிராக அறிக்கை விடுவதை இனி இவர்கள் கை விட வேண்டும்.மேலும் 2 கோடி ரூபாய் பணம் வாங்கியதை நிருபிக்க முடியுமா என சவால் விடுத்துள்ளனர்.சில பாராளுமன்ற உறுப்பினர்கள் அந்த பணத்திற்கு என்ன செய்தார்கள் என்பதனை தெரியப்படுத்தியுள்ளனர்.

அபிவிருத்திக்கான நிதி என்றால் எப்படி 225 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்ற போது எப்படி 15 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத்திரம் வழங்கப்படும்?.இவர்கள் பணம் வேண்டியது என்பது உண்மை.

வேண்டிய பணத்தை வேண்டவில்லை என்கின்றார்கள்.அபிவிருத்திக்கு பணம் வேண்டுவதை நாங்கள் எதிர்க்கவில்லை.தாராளமாக வேண்டுங்கள்.பல கோடிகளை பெற்றும் மக்களுக்கு,கிராமங்களுக்கு உதவிகளை செய்யுங்கள்.

-ஆனால் எந்த அடிப்படையில் பணம் பெற்றீர்கள்?அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு வழங்கியே பணத்தை பெற்றுள்ளீர்கள்.

-வரவு செலவு திட்டத்தை எதிர்க்க வேண்டிய நீங்கள் அதற்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு 2 கொடி ரூபாய் அபிவிருத்திக்கு என பெற்றுக்கொண்டு வாக்களித்துள்ளமை என்பதனை இலஞ்சம் என்று சொல்லாமல் வேறு எப்படி கூற முடியும்???என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பானது அரசுடன் ஆதரவை பேணி வருவம் காரணத்தினாலேயே கொள்கை ரீதியாக விரிசல்கள் ஏற்பட்டுள்ளது-எஸ்.ஆர்.குமரேஸ்-EPRLF Reviewed by Author on January 29, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.