அண்மைய செய்திகள்

recent
-

பெரியமடு குளத்தில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபட ஈச்சளவக்கை கிராம மீனவர்களுக்கு அனுமதி மறுப்பு-

அனுமதி வழங்க கோரி ஈச்சளவக்கை கிராம மீனவர்கள் பிரதேசச் செயலாளரிடம் மகஜர் கையளிப்பு.

 மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பெரியமடு கிரமத்தில் அமைந்துள்ள குளத்தில் 'ஈச்சளவக்கை' கிராமத்தில் உள்ள  மீனவர்கள் மீன்பிடித்தொழிலில் ஈடுபட அனுமதி  மறுக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த கிராம மீனவர்களுக்கு அனுமதி வழங்க கோரி பாதீக்கப்பட்ட ஈச்சளவக்கை கிராம நன்னீர் மீன்பிடி தொழிலாளர்கள் இன்று(17) புதன் கிழமை காலை மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்திற்குச் சென்று உதவி பிரதேசச் செயலாளரிடம் தமது கோரிக்கை அடங்கிய மகஜரை கையளித்துள்ளனர்.

இதன் போது பாதீக்கப்பட்ட ஈச்சளவக்கை கிராம நன்னீர் மீன்பிடி தொழிலாளர்கள் உதவி பிரதேசச் செயலாளரிடம் தெரிவிக்கையில்,,,

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட ஈச்சளவக்கை கிராம மக்கள் யுத்தத்தினால் இடம் பெயர்ந்து சென்று தற்போது மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கிராம மக்களின் வாழ்வாதாரமாக கடந்த காலங்களில் நன்னீர் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

எனினும் குறித்த கிரம மக்கள் யுத்தத்தின் பின் மீள் குடியேறியுள்ள நிலையில் பெரியமடு கிரமத்தில் அமைந்துள்ள குளத்தில் நன்னீர் மீன் பிடியில் ஈடுபட பெரியமடு கிராம மக்கள் எதிர்ப்பை தெரிவிக்கின்றனர்.
ஈச்சளவக்கை கிராமத்தைச் சேர்ந்த சுமார் 46 குடும்பங்கள் வாழ்வாதாரம் இன்றி பாதீப்படைந்து வருவருகின்றனர்.

நாட்டில் இடம் பெற்ற யுத்தத்தின் போது இடம் பெயர்ந்து சென்று மீண்டும் 2010 ஆம் ஆண்டு மீள் குடியேற்றம் செய்யப்பட்ட நிலையில் பெரிய மடு கிராமத்தில் உள்ள முஸ்ஸீம் சகோதரர்களுடன், ஈச்சளவக்கை கிராமத்தில் உள்ள மீனவர்கள் இணைந்து மீன் பிடியில் ஈடுபட நடவடிக்கைகளை மேற்கொண்ட போதும் பெரிய மடு கிராமத்தில் உள்ளவர்கள் எங்களுக்கான அனுமதியை வழங்கவில்லை.

கடந்த 2010 ஆண்டு முதல் இன்று வரைக்கும் சுமார் 8 வருடங்களாக எங்களை பெரிய மடு குளத்தில் மீன் பிடிக்க அனுமதியை வழங்கவில்லை.

-இதனால் ஈச்சளவக்கை கிராம மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

வேறு தொழில் செய்வதற்கு விவசாய காணிகள் கூட இல்லை.

எங்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் இங்குள்ள அதிகாரிகளுக்கு பல தடவைகள் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.

-எமது பிரச்சினை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளோம்.

எனினும் எமது பிரச்சினைக்கு மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.என பாதீக்கப்பட்ட மீனவர்கள் சார்பாக வருகை தந்தவர்கள் கோரிக்கை விடுத்ததோடு,உதவி பிரதேசச் செயலாளரிடம் தமது கோரிக்கை அடங்கிய மகஜரையும் கையளித்தனர்.

மகஜர் கையளிக்கும் நிகழ்வில் ஈச்சளவக்கை கிராமத்தில் இருந்து பாதீக்கப்பட்ட பல மீனவர்கள் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பெரியமடு குளத்தில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபட ஈச்சளவக்கை கிராம மீனவர்களுக்கு அனுமதி மறுப்பு- Reviewed by Author on January 17, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.