அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பொது வைத்தியசாலையில் தொடர்ந்தும் வைத்திய நிபுனர்கள் பற்றாக்குறை-மக்கள் பல்வேறு அசௌகரியங்களை சந்திக்கும் நிலை....



மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் மக்களுக்கான சேவையினை வழங்குவதில் தொடர்ந்தும் பல்வேறு முட்டுக்கட்டைகளும் பிரச்சினைகளும் வைத்தியசாலை தரப்பினர் முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் தெரிவித்துள்ளார்.

-மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் நிலவரம் தொடர்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(7) மாலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,

பொதுவாகவே மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் தற்போதைய நிலையில் வைத்திய நிபுனர்களின் பற்றாக்குறை பாரிய பிரச்சினையாக இருக்கின்றது.

ஆகக்குறைந்தது ஒரு சிகிச்சைப்பிரிவில் இரண்டு வைத்திய நிபுனர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
பிரதானமாக குழந்தைகள் சிகிச்சைப்பிரிவு, மகப்பேற்று சிகிச்சைப்பிரிவு, அறுவைச் சிகிச்சைப் பிரிவு , பொது மருத்துவம் மற்றும் அறுவைச்சிகிச்சை கூடத்தில் மயக்க மருந்து வழங்கும் வைத்திய நிபுனர் ஆகியோர் மிக அவசியமாக காணப்படுகின்றனர்.

மன்னார் வைத்தியசாலையினை பொறுத்தவகையில் பொது மருத்துவ பிரிவிற்கும், அறுவைச்சிகிச்சை பிரிவிற்கும் இரண்டு வைத்திய நிபுனர்கள் வீதம் தற்போது கடமையில் இருக்கின்றார்கள்.

ஆனால் குழந்தைகள் சிகிச்சைப்பிரிவிற்கும்,மிக முக்கியமான மகப்பேற்று சிகிச்சை பிரிவிற்கும் ஒரு வைத்திய நிபுனருடைய உதவியுடனேயே இங்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றது.

-இவ்வாறான காலப்பகுதியிலேயே குறித்த வைத்திய நிபுனர்கள் கடமை விடுமுறை எடுக்கின்ற போது அவர்களுக்கு பதிலாக அங்கே சேவையாற்ற வைத்திய நிபுனர் இல்லாத நிலை காணப்படுகின்றது.
இவ்வாறான காலங்களில் நாங்கள் வேறு நிலையங்களுக்கு நோயாளர்களை அனுப்ப வேண்டிய தேவை ஏற்படுகின்றது.

-கடந்த மாதம் மட்டும் மகப்பேற்று நிபுனர் விடுமுறையில் இருந்த காலங்களில் பதில் மகப்பேற்று நிபுனர் இல்லாத காரணத்தினால் பல கர்ப்பிணித்தாய்மார்கள் பிரசவத்திற்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தாய்மார்கள் வவுனியா,யாழ் வைத்தியசாலைகளுக்கு இடமாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டது.

இதன் போது பல தாய்மார்கள் அம்புலான்ஸ் வண்டியினுள் குழந்தைகளை பிரசவித்துள்ள நிலை ஏற்பட்டுள்ளது.
சுமார் 15 பிரசவங்கள் கடந்த மாதம் இவ்வாறு நிகழ்ந்துள்ளது.

மேலும் சத்திர சிகிச்சைக்கு உற்படுத்தப்பட்ட தாய் ஒருவர் இரத்தப்பெறுக்கின் காரணமாக உடனடியாக அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட வேண்டிய தேவை இருந்த போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவு இருந்தாலும் குறித்த சிகிச்சை பிரிவில் கடமையாற்ற வேண்டிய மயக்க மருந்து கொடுக்கும் வைத்திய நிபுனர் இல்லாமையினால் குறித்த தாயைக்கூட வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.

-நாங்கள் ஒவ்வெரு முறையும் குறித்த பிரச்சினைகள் தொடர்பாக மத்திய அரசினுடைய, மத்திய சுகாதார அமைச்சினுடைய வைத்திய நிபுனர்களை நியமிக்கின்ற பிரிவுக்கு நாங்கள் தகவல்களை வழங்கி நிரந்தறமான வைத்திய நிபுனர்களை நியமிக்கும்படி நாங்கள் தொடந்தும் கோரிக்கைகளை முன் வைத்து வருகின்றோம்.
-ஆனால் நடவடிக்கைகள் மந்தகரமாகவே இருக்கின்றது.

மன்னார் மாவட்ட மக்கள் தொடர்ந்தும் குறித்த வைத்தியசாலையில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

-மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றிய மயக்க மருந்து கொடுக்கும் வைத்திய நிபுனர் ஒருவர் உத்தியோக பூர்வமான முறையில் வைத்திய சாலையில் இருந்து விடுவிப்பு பெற்றுச் செல்லாமல் தன்னிச்சையாக வெளியேறிச் சென்றுள்ளார்.

-ஆனால் நாங்கள் குறித்த வைத்திய நிபுனரை உத்தியோக பூர்வமாக கடமையில் இருந்து விடுவிக்க இல்லை.
அவர் தன்னிச்சையாக சென்றுள்ளமையினால் அவருக்கு எதிராக மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளோம்.

-தற்போதைய நிலையில் இப்போது இருக்கின்ற மகப்பேற்று நிபுனர் இரண்டு வராங்களின் பின் வெளிநாட்டுப்பயிற்சிக்காக செல்ல வேண்டிய நிலையில் இருக்கின்றார்.

-தற்போது கடமையாற்றும் குறித்த மகப்பேற்று நிபுனர் பதில் கடமையில் இருக்கின்றார்.ஆனால் நிறந்தரமான மகப்பேற்று நிபுனர் கூட  இல்லை.  

-நிலைமை இப்படியாக இருக்குமானால் எதிர்காலத்தில் சகல கர்ப்பிணித் தாய்மார்களையும் பிரசவத்திற்காக மன்னாரில் இருந்து வேறு வைத்தியசாலைகளுக்கு அனுப்ப வேண்டிய பாரிய பிரச்சினை உறுவாகும்.
அதற்கு முன்பாக குறித்த பிரச்சினைகள் சீர் செய்யப்பட வேண்டும்.

நான் இவ்விடையம் தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ராஜித சேனராத்தினவுடன் நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலைமைகளை தெரியப்படுத்தியுள்ளேன்.

கொழும்பில் மத்திய சுகாதார அமைச்சினுடைய பணிப்பாளர் நாயகம் அவர்களுடனும் தொடர்பு கொண்டு நிலைமையை நான் தெழிவு படுத்தியுள்ளேன்.

உடனடியாக செயற்பட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுள்ளேன்.நாங்கள் தொடர்ந்தும் அவதானித்து வருகின்றோம்.மேலதிகமாக என்ன செய்ய முடியும் என ஆலோசித்தும் வருகின்றேன்.என அவர் மேலும் தெரிவித்தார்.


மன்னார் பொது வைத்தியசாலையில் தொடர்ந்தும் வைத்திய நிபுனர்கள் பற்றாக்குறை-மக்கள் பல்வேறு அசௌகரியங்களை சந்திக்கும் நிலை.... Reviewed by Author on January 08, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.