அண்மைய செய்திகள்

recent
-

பறக்கும் விமானத்தில் திருமணம் நடத்திய போப் பிரான்சிஸ் -


சிலி நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ள போப் பிரான்சிஸ் விமானத்தில் வைத்து திருமணம் ஒன்றை செய்து வைத்துள்ளார்.
சிலி விமான ஊழியர் ஜோடியான Paula Podest Ruiz(39) மற்றும் Carlos Ciuffardi Elorriga(41) ஆகிய இருவரும் கடந்த 2010ம் ஆண்டில் சிவில் முறைப்படி திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

உள்ளூர் தேவாலயம் குறித்த ஆண்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இடிந்துவிட்டதால், மதமுறைப்படி அவர்கள் திருமணம் செய்துகொள்ளாமல் இருந்துள்ளனர்.

இந்த நிலையில் சான்டியாகோவில் இருந்து வட பகுதியில் இருக்கும் இகீகே நகருக்கு விமானப் பயணம் மேற்கொள்கையில், போப் பிரான்சிஸ் குறுகிய மத சடங்கை நிறைவேற்றி அவர்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.
குறித்த திருமண நிகழ்வுக்கு அந்த விமான நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி சாட்சியாக இருந்தார்.
போப் பிரான்சிசுடன் விமானத்தில் பயணம் மேற்கொண்ட மதகுருமார்கள் அதிகாரப்பூர்வ ஆவணத்தை எழுதி கையெழுத்திட்டுள்ளனர்.
பறக்கும் விமானத்தில் வைத்து போப் ஒருவர் நடத்தி வைத்த முதல் திருமணம் இதுவாகும்.
பறக்கும் விமானத்தில் திருமணம் நடத்திய போப் பிரான்சிஸ் - Reviewed by Author on January 19, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.