அண்மைய செய்திகள்

recent
-

அமெரிக்காவில் இந்திய பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாப சம்பவம் -


இந்திய பெண்ணொருவர் ஐஐடி-யில் படித்து அமெரிக்காவில் நல்ல வேலையில் இருந்த நிலையில் வேலை பறிபோனதுடன், அவரின் கடவுச்சீட்டும் தொலைந்து போனதால் சாலையில் ஓவியத்தை விற்று வாழ்ந்து வருகிறார்.

கொல்கத்தா நகரை சேர்ந்த ஜெயஸ்ரீ என்ற பெண் கடந்த 1991-ல் ஐஐடி-யில் தனது படிப்பை முடித்து விட்டு அமெரிக்காவின் கலிபோர்னியா, சான் பிரான்ஸிஸ்கோ போன்ற பல இடங்களில் உள்ள டி.சி.எஸ், காக்னிசெண்ட் போன்ற பல சாப்ட்வேர் நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளார்.
ஆனால் சில காலமாக அமெரிக்கா சாலைகளில் ஓவியத்தை விற்று அதன் மூலம் ஜெயஸ்ரீ வாழ்ந்து வருகிறார்.

நிரந்தர வசிப்பிடம் இல்லாததால் மோட்டலில் அவர் தங்கியுள்ளார். அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்கள் சிலர் ஜெயஸ்ரீயை சாலையில் பார்த்து பேசிய நிலையிலேயே இந்த விடயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

வாஷிங்டனில் பணிபுரியும் இந்தியரான பிரபட் கூறுகையில், சில காலமாகவே ஜெயஸ்ரீ மன அழுத்தத்தில் உள்ளார். 2014 வரை நல்ல வேலையில் தனது நண்பர்களுடன் அடுக்குமாடி குடியிருப்பில் அவர் வசித்து வந்துள்ளார்.
அங்கு அவரை சிலர் துன்புறுத்தியுள்ளனர். இந்நிலையில் தான் தனது கடவுச்சீட்டு மற்றும் ஆவணங்களை ஜெயஸ்ரீ தொலைத்தோடு வேலையும் பறிபோனது.
இதன் காரணமாக அவருக்கு வேலை, வீடு, மருத்துவ காப்பீடு போன்றவைகள் கிடைக்கவில்லை.
கடந்த 18 ஆண்டுகளாக அமெரிக்காவில் இருக்கும் அவருக்கு திருமணமாகி கடந்த 2006-ல் கணவரை பிரிந்துள்ளார். ஜெயஸ்ரீயின் உடல்நிலை மோசமாக உள்ளது என கூறியுள்ளார்.
இந்நிலையில் தனக்கு வேலை வாங்கி தர யாராவது முன்வர வேண்டும் என ஜெயஸ்ரீ கோரிக்கை வைத்துள்ளார்.
அமெரிக்காவில் இந்திய பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாப சம்பவம் - Reviewed by Author on January 24, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.