அண்மைய செய்திகள்

recent
-

உலகின் மிகவும் வயதான நபர் மரணம்:


தனது 113-வது பிறந்த நாளை கொண்டாடிய உலகின் மிகவும் வயதான நபர் மரணமடைந்துள்ளதாக உறவினர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
ஸ்பெயினின் தென் மேற்கு பகுதியில் அமைந்துள்ள Bienvenida நகரின் Badajoz கிராமத்தில் குடியிருந்து வந்த Francisco Nunez Olivera நேற்று உள்ளூர் நேரப்படி இரவு 10.30 மணியளவில் மரணமடைந்துள்ளார்.

அவரது உடலானது உள்ளூர் நேரப்படி இன்று மாலை 5.30 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. குறித்த சடங்குகளில் கலந்துகொண்ட நகர மேயர் Antonio Carmena அஞ்சலி கூட்டத்தை முன்னெடுத்து நடத்தினார்.
மட்டுமின்றி Bienvenida நகரில் ஒரு நாள் முழுக்க துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார். கடந்த டிசம்பர் 13 ஆம் திகதி 113 வயதான பிரான்சிஸ்கோ 4 பிள்ளைகளும் 9 பேரப்பிள்ளைகளும் 15 கொள்ளுப் பேரப்பிள்ளைகளும் உள்ளனர்.

தமது பிறந்த நாளை பாரம்பரிய ஸ்பாஞ்ச் கேக் மற்றும் ஒரு கோப்பை பாலுடன் கொண்டாடிய அவர், பின்னர் உள்ளூர் மக்கள் மற்றும் உலகெங்கிலும் இருந்து வந்த வாழ்த்துகளை பெற்றுக் கொண்டார்.
பிரான்சிஸ்கோ 97 மற்றும் 93 வயதில் இரண்டு சகோதரர்களும் உள்ளனர். மொரோக்கோவில் ரிஃப் பழங்குடியினருடன் 1920-ஆம் ஆண்டின் முதற்பகுதியில் நடந்த போரில் ஸ்பெயின் நாட்டுக்கு ஆதரவாக போரிட்டுள்ளார்.

தற்போதுவரை தமது மகளான Antonia-உடன் வசித்து வந்த பிரான்சிஸ்கோ இறக்கும் வரையில் நோய் காரணமாக மருத்துவமனை சென்றதில்லை எனவும்,
இதுநாள் வரை இரண்டுமுறை மட்டுமே மருத்துவமனையில் சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சில நாட்களில் வாய் மூடாமல் பேசிக்கொண்டிருக்கும் தமது தந்தை சில நாட்களில் முழு நேரமும் தூங்கியே கழிப்பார் என Antonia தெரிவித்துள்ளார்.
பிரான்சிஸ்கோ மரணமடைந்துள்ளதால் தற்போது உயிருடன் இருக்கும் அதிக வயதானவராக ஜப்பானின் Masazou Nonaka உள்ளார். இவர் 1905 ஆம் ஆண்டு யூலை 25 ஆம் திகதி பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகின் மிகவும் வயதான நபர் மரணம்: Reviewed by Author on January 31, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.