அண்மைய செய்திகள்

recent
-

மாகாண ஆளுநராக போட்டியிடும் 16 வயது இளைஞன்: எங்கே தெரியுமா? -


அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தில் 16 வயதே நிரம்பிய 6 இளைஞர்கள் ஆளுநர் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளனர்.
கன்சாஸ் மாகாண ஆளுநராக போட்டியிட வயது வரம்பு எதுவும் இல்லை என்ற விதியை முன்வைத்து குறித்த இளைஞர்கள் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் இளைஞர்களின் இந்த முடிவை புரிந்துகொண்ட மாகாண சட்ட நிபுணர்கள் புது சட்டமொன்றை இயற்றி இளைஞர்களின் திட்டத்தை முறியடித்துள்ளனர்.
இருப்பினும் தங்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என குறித்த இளைஞர்களில் ஒருவரான Jack Bergeson (16) கோரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவின் பெரும்பாலான மாகாணங்களை விட கல்வியில் கன்சாஸ் மாகாணம் மிகவும் பிந்தங்கி உள்ளதாக குற்றஞ்சாட்டும் இளைஞர்கள், தங்களின் அரசியல் வருகை கண்டிப்பாக மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்பிக்கைதெரிவித்துள்ளனர்.
வெற்றி வாய்ப்புகள் மிக மிக குறைவு என்றபோதிலும், சம வயது இளைஞர்கள் பலர் தம்மை ஊக்குவித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாகாண ஆளுநராக போட்டியிடும் 16 வயது இளைஞன்: எங்கே தெரியுமா? - Reviewed by Author on February 06, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.