அண்மைய செய்திகள்

recent
-

புதிய உலக சாதனை படைத்த நியூசிலாந்து வீரர் -


நியூசிலாந்து துடுப்பாட்ட வீரர் மார்டின் கப்தில், டி20 போட்டிகளில் அதிக ஓட்டங்களை குவித்த வீரர் என்னும் சாதனையை படைத்துள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில், நியூசிலாந்து வீரர் மார்டின் கப்தில் 49 பந்துகளில் 9 சிக்ஸர் மற்றும் 6 பவுண்டரிகளுடன் சதம் அடித்தார், இது அவருக்கு 2வது டி20 சதமாகும்.

இதன்மூலம் டி20 போட்டியில், அதிக ஓட்டங்கள் குவித்திருந்த சக நாட்டு வீரர் மெக்கல்லத்தின் சாதனையை முறியடித்துள்ளார். மெக்கல்லம் 71 ஆட்டங்களில் விளையாடி 2140 ஓட்டங்கள் குவித்துள்ளார்.
மார்டின் கப்தில், 73 ஆட்டங்களில் 2188 ஓட்டங்கள் குவித்து முதலிடத்தை பிடித்துள்ளார். இந்திய வீரர் விராட் கோஹ்லி, 55 ஆட்டங்களில் 1956 ஓட்டங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

மூன்று வகை கிரிக்கெட்டிலும் அதிக ஓட்டங்கள் குவித்தவர்கள்
  • டெஸ்ட் கிரிக்கெட்: சச்சின் டெண்டுல்கர் - 15,921
  • ஒருநாள் கிரிக்கெட்: சச்சின் டெண்டுல்கர் - 18426
  • டி20 கிரிக்கெட்: மார்டின் கப்தில் - 2188


Reuters

புதிய உலக சாதனை படைத்த நியூசிலாந்து வீரர் - Reviewed by Author on February 16, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.