அண்மைய செய்திகள்

recent
-

ஒரே சதத்தால் வரலாற்று சாதனைகள் படைத்த கோஹ்லி -


இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி, நேற்றைய போட்டியில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக சதம் விளாசியதன் மூலமாக, பல வரலாற்று சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய அணி, தற்போது ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது.
நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நேற்றைய போட்டியில், இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லி சதம் விளாசினார், இது அவருக்கு 33வது சதமாகும்.
இதன்மூலம் இந்திய அணியின் தலைவராக அதிக சதங்கள் விளாசிய முன்னாள் ஜாம்பவான் சவுரவ் கங்குலியின் சாதனையை கோஹ்லி சமன் செய்துள்ளார்.
கங்குலி, 142 போட்டிகளில் 11 சதங்கள் அடித்திருந்தார். ஆனாலி, விராட் கோஹ்லி 41 போட்டிகளிலேயே 11 சதங்கள் அடித்துள்ளார்.
விராட் கோஹ்லி, இரண்டாவதாக துடுப்பாட்டம் செய்தபோது 20 சதங்கள் விளாசியுள்ளார். அதில், 18 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச அளவில் அணித்தலைவராக அதிக சதங்கள் அடித்தவர்களின் பட்டியலில், அவுஸ்திரேலியாவின் முன்னாள் தலைவர் ரிக்கி பாண்டிங் (22) முதலிடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் டி வில்லியர்ஸ் (13) இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

மேலும், இந்த சதத்தின் மூலமாக ஒருநாள் போட்டியில் விளையாடும் அனைத்து நாடுகளிலும், சதம் அடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
கோஹ்லி அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, இலங்கை, நியூசிலாந்து, வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள் ஆகிய நாடுகளில் சதம் அடித்துள்ளார். ஆனால், பாகிஸ்தானில் விளையாடாததால் அங்கு அவர் சதம் விளாச முடியாமல் போய்விட்டது.
இதற்கு முன்பு, இந்திய முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மற்றும் இலங்கையின் முன்னாள் ஜாம்பவான் ஜெயசூரியா ஆகியோர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர். தற்போது விராட் கோஹ்லியும் அவர்களுடன் இணைந்துள்ளார்.
டெண்டுல்கர் மேற்கிந்திய தீவுகளிலும், ஜெயசூரியா ஜிம்பாப்வேயிலும் சதம் அடிக்கவில்லை. கோஹ்லி இதுவரை 203 ஒருநாள் போட்டிகளில், 33 சதங்கள் அடித்துள்ளார். அதில் வெளிநாட்டு மண்ணில் 19 சதங்கள் அடங்கும்.
ஒரே சதத்தால் வரலாற்று சாதனைகள் படைத்த கோஹ்லி - Reviewed by Author on February 03, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.