அண்மைய செய்திகள்

recent
-

சிகரெட், மதுவை விட ஆபத்தானது சர்க்கரை தானாம்! -


அன்றாடம் நாம் உணவில் சேர்த்துக்கொள்ளும் பொருட்களுள் ஒன்று தான் சர்க்கரை. ஆனால் இது சிகரெட், மது முதலியவற்றை விட அதிக ஆபத்தானதாகும். ஏனெனில் சர்க்கரையில் எவ்வித சத்தும் கலோரிகளும் கிடையாது என்று கூறப்படுகின்றது.
சர்க்கரையை நாம் தினமும் உட்கொள்ளுவதால் புற்றுநோய், எலும்பு முறிவு நோய், மூட்டு வியாதிகள், உடல் பருமன், இதய நோய்கள், இரத்த அழுத்தம், சருமநோய்கள், விரைவில் முதிர்ச்சி, முதுமை, பித்தக்கல், ஈரல்நோய், சிறுநீரகக்கோளாறு, சொத்தைப்பல், பெண்ணுறுப்பு தொற்றுநோய், அளவுக்கு மீறிய சுறுசுறுப்பு, வன்செயல் மற்றும் பரவலாக இருக்கும் நீரழிவு நோய் என ஒவ்வொரு உறுப்பையும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது.

சர்க்கரையை உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள்
வாயில் உள்ள பாக்டீரியாக்கள் அதனுடன் சேர்ந்து அமிலத்தை உருவாக்குகிறது. இது பற்களில் உள்ள எனாமலை அரித்து ஓட்டையாக்கி பல் சொத்தையை உண்டாக்குகிறது.
இரத்தத்தில் கொலஸ்டிரால் அளவை அதிகரித்துவிடுவதால், இருதய நாளங்கள் அடைபட்டு இரத்தம், ஆக்ஸிஜன் மற்றும் சத்துக்கள் செல்வது தடைபட்டுவிடுகின்றது. இதனால் தசைநார்கள் இறந்து போய் மாரடைப்பு ஏற்படுகிறது.
தினமும் 24 தேக்கரண்டி சர்க்கரையை நமது உணவில் சேர்த்தால் இது 92 சதவிகித வெள்ளை இரத்த அணுக்கள் உருவாவதை தடுக்கிறது. இந்த வெள்ளை அணுக்கள் அபாயகரமான பாக்டீரியாக்களை எதிர்க்கும் தன்மை உடையவை.

உடலில் அதிகம் சர்க்கரை இருந்தால் அதைச் சுத்தப்படுத்த அதிகமான இன்சுலின் வெளியிடப்படுகிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியைத் தடுக்கும் ஹார்மோன்களான புரோஸ்டேகிளேன்டினுக்கும் அதிக தொடர்பு இருக்கிறது. இது புற்றுநோய் கழலையை உருவாக்குகிறது.
அதிக அளவு சர்க்கரை எடுத்துக் கொண்டால் பெண்ணுறுப்பு தொற்று நோயை ஏற்படுத்தி விடுகின்றது.

அளவுக்கு அதிகமாக சுக்ரோஸ் உள்ள உணவு எலும்பில் கால்சியத்தைக் குறைத்து எலும்பு முறிவு நோயை உண்டாக்குகிறது.
காபி, டீயில் ஒரு நாளைக்கு அதிகபட்சம் மூன்று அல்லது நான்கு தேக்கரண்டி சர்க்கரையை பயன்படுத்தினாலே போதுமானதாகும.
சிகரெட், மதுவை விட ஆபத்தானது சர்க்கரை தானாம்! - Reviewed by Author on February 17, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.