அண்மைய செய்திகள்

recent
-

தமிழ் மக்கள் இலக்குவைக்கப்பட்ட யுத்தம்! நல்லாட்சி அரசு பொறுப்பு கூறவேண்டும் -


இலங்கையில் தமிழ் மக்களை இலக்குவைத்து நடத்தப்பட்ட யுத்ததிற்கு நல்லாட்சி அரசு பொறுப்பு கூறவேண்டும்.
எனினும், நல்லாட்சி அரசாங்கம் 3 ஆண்டுகள் கடந்த நிலையிலும் அதனை செய்யவில்லை. என்று வடமாகண அமைச்சர் அனந்தி சசிதரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

வன்னி பிரதேசத்தில் அரச படைகளினால் பாதுகாப்பு என்ற போர்வையில் கையகப்டுத்தப்பட்ட காணிகள் மற்றும் வாழ்வாதாரப்பிரச்சினை தொடர்ப்பான நூல்வெளியீட்டு நிகழ்வு இன்று முல்லைத்தீவில் இடம்பெற்றது.
இதன்போது பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
“இந்த யுத்தம் முடிவுக்கு வந்த பின்னரும் பொதுமக்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. எத்தனைபேர் கடத்தப்பட்டுள்ளார்கள்? எத்தனைபேர் கொல்லப்பட்டுள்ளார்கள்? எத்தனையோ பெண்கள் வன்புணர்விற்கு ஆளாகியுள்ளார்கள்.

இதனை தடுக்க வேண்டும் என்றே நல்லாட்சி அரசாங்கத்திடமும், சர்வதேசத்திடமும் கூறினோம். கட்டமைக்கப்பட்ட இந்த இன அழிப்பை நிறுத்துவதென்றால் நடந்த யுத்தத்தில் இருந்து பாடங்களை கற்று எங்களுக்கான நீதியை வழங்கவேண்டும் என்று.
ஆனால் நல்லாட்சி அரசு இன்னமும் பொறுப்பு கூறமறுக்கின்றது. இந்த நிலையிலையே மக்கள் தொடர்ச்சியாக தமது போராட்டங்களினூடாக அழுத்தத்தை கொடுக்கின்றார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் இலக்குவைக்கப்பட்ட யுத்தம்! நல்லாட்சி அரசு பொறுப்பு கூறவேண்டும் - Reviewed by Author on February 27, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.