அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் ஊடகவியலாளர்கள் சமூக ஆர்வலர்களுக்கான 2நாள் பன்முகத்தன்மை சமய நல்லிணக்கம் தொடர்பான பயிற்ச்சிப்பாசறை



இவ்நிகழ்வானது 27- 28-02-2018 மன்னார் நகரசபை புதிய கேட்போர் மண்டபத்தில்  இரண்டு நாள் நிகழ்வாக  தேசிய சமாதானப்பேரவையின் ஏற்பாட்டில் OPEN AND USAID  இணைந்து வளவாளராக திரு .ஜெ.பெனடிற்(பெனோ) திரு.இராகவன்   இவர்களுடன் உறுப்பினர்களாக திரு.மெடோசன் திரு. அனஸ்ரின் திரு.சுதுமுன் திறம்பட அமைத்திருந்தார்கள்

பயிற்ச்சிப்பாசறையின் நோக்கமாக
  • சமயங்களினூடாக நல்லிணக்கம் காணல்
  • பன்மைத்துவம் உள்வாங்குதல்
  • தேசிய அடையாளத்தினை வெளிப்படுத்துதல் இம்மூன்று பிரிவுகளில்   பல்லின மக்களினங்களிடையே  உள்ள இனம் மதம் மொழி  சமயம்  கலாச்சாரம் பழக்கவழக்கம்  போன்றவற்றில்  பன்மைத்துவம் செயற்படுமானால் நல்ல ஆரோக்கியமான ஒரு சூழல் அமையும் ஆளுமையான தலைமைகளை கொண்ட அறிவுள்ள சமூதாயம் உருவாகும்  வளங்களும் வாய்ப்புக்களும் எல்லாம் எல்லாருக்கும் சமமாக பகிரப்படும் ஒரு அமைதியான அருமையான மக்களை கொண்ட நாடாக அமையும் என்பதின் பொருளில் விரிவாக குழுவாக ஆராயப்பட்டது.  தற்போதய சூழலில் இப்படியான பயிற்ப்பட்டறை அவசியமானதும் தெளிவு பெறவேண்டும்.

 இப்பயிற்ச்சிப்பட்டறையில் நானும் கலந்து கொண்டு இறுதிநாளில்
பன்மைத்துவம் தொடர்பான சிறுகவிதை சொல்லுமாறு கேட்டபோது

 மனிதப்பூனை
மனமோ யானை
பன்முகப்பானையிலே- தனித்துவம் சுயமரியாதை சமத்துவம் மனிதமாண்பு- பொங்க பருகுவோம் தேனாக

பலரின் முகம்
பன்படாத அகம்
இன்முகத்தோடு பழகு
பன்முகத்தில் தான் அழகு

எல்லாவற்றினையும் ஏற்றுக்கொள்
எளிதாய் நீ மாற்றிக்கொள்
நீ என்பது சமூக அலகு
உன்னால் மாறட்டும் இந்த உலகு......

-வை.கஜேந்திரன் -













































மன்னார் ஊடகவியலாளர்கள் சமூக ஆர்வலர்களுக்கான 2நாள் பன்முகத்தன்மை சமய நல்லிணக்கம் தொடர்பான பயிற்ச்சிப்பாசறை Reviewed by Author on March 01, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.