அண்மைய செய்திகள்

recent
-

உணவு, குடிநீர் தராமல் சித்ரவதை: கட்டார் சிறையில் இருந்து மீண்ட தமிழர்கள் கண்ணீர் -


எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கட்டார் நாட்டு கடலோரக் காவல்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் சிறையில் சித்ரவதைக்கு உள்ளானதாக கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய அமீரகத்தின் அபுதாபியில் தங்கி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர் தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள்.

இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 15 ஆம் திகதி, கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, எல்லை தாண்டியதாகக் கூறி, கட்டார் நாட்டு கடலோரக் காவல்படையினர் கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.
கடந்த 60 நாள்கள் சிறையில் இருந்த நிலையில் அதில் 6 மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கைதான 7 பேருக்கும் தலையை மொட்டையடித்து, உணவு மற்றும் தண்னீர் கூட தராமல் சித்ரவதைக்கு உள்ளாக்கியதாக விடுவிக்கப்பட்ட மீனவர்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.
விசைப்படகின் உரிமையாளருக்கு அபராதத் தொகை அதிகம் என்பதால் கட்டார் அவரை விடுவிக்கவில்லை எனவும் எஞ்சிய 6 பேரும் நாடு திரும்பியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
உணவு, குடிநீர் தராமல் சித்ரவதை: கட்டார் சிறையில் இருந்து மீண்ட தமிழர்கள் கண்ணீர் - Reviewed by Author on March 27, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.