அண்மைய செய்திகள்

recent
-

இந்த மாதம் முதல் ஜேர்மனியில் வரவிருக்கும் அதிரடி மாற்றங்கள் என்ன...


ஜேர்மனியில் மார்ச் மாதம் தொடங்கி பல்வேறு அதிரடி மாற்றங்கள் அமுலுக்கு வர இருப்பதாக அரசு தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதலாவதாக சிகரெட் விலை பெருமளவு அதிகரிக்க உள்ளது. விலை உயர்வுக்கு எதிர்ப்பு கிளம்பினால், பாக்கெட்டில் சிகரெட்டின் எண்ணிக்கையை குறைக்கவும் திட்டம் உள்ளதாக தெரியவந்துள்ளது.

சிகரெட் தொழிற்சாலைகள் கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் 21.4 பில்லியன் யூரோ அளவுக்கு வருவாய் ஈட்டியுள்ளது. இதில் அரசுக்கு வரியாக மட்டும் 15.7 பில்லியன் யூரோ செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

கட்டணம் செலுத்தி தொடர்களை நேரலையாக பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு மார்ச் இறுதி முதல் தித்திக்கும் செய்தி ஒன்று காத்திருக்கிறது.
இதுவரை கட்டணம் செலுத்திய வாடிக்கையாளர்கள் ஜேர்மனியில் மட்டுமே கண்டு களித்து வந்த நிலையில், இனி ஐரோப்பிய நாடுகளில் எங்கிருந்தும் தொடர்களை கண்டு களிக்கலாம்.
விடுமுறை நாட்கள் இனி வீணாகாது. மட்டுமின்றி இதற்கென வேறு கட்டணம் எதுவும் செலுத்த தேவை இல்லை.
பொருட்களை விநியோகிக்கும் போது மட்டும் பணத்தை செலுத்தும் வசதியை பயன்படுத்துவோருக்கு அருமையான தகவல்.

இன்று முதல் இந்த வசதியை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் வேறு சிறப்பு கட்டணம் எதுவும் செலுத்த தேவை இல்லை.
மார்ச் 21 முதல் அனைத்து புது கார்களிலும் அவசர அழைப்புக்கான eCall அமைப்பு கட்டாயமாக்கப்படுகிறது.
இதனால் ஆபத்து ஏற்பட்ட சில நிமிடங்களிலேயே பாதிக்கப்பட்டவர்களை மீட்பு குழுவினர் சென்றடைய வசதியாக இருக்கும் என கருதப்படுகிறது.

இந்த மாதம் முதல் ஜேர்மனியில் வரவிருக்கும் அதிரடி மாற்றங்கள் என்ன... Reviewed by Author on March 02, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.