அண்மைய செய்திகள்

recent
-

சிரியாவின் ஒயிட் ஹெல்மெட்ஸ் வீரர்கள் பற்றி தெரியுமா? -


சிரியாவில் உச்சம் அடைந்திருக்கும் உள் நாட்டு யுத்தத்தில் நாள் தோறும் கொத்துக் கொத்தாய் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர்.
கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் நடைபெற்றுவரும் இந்த போரில் சுமார் 5 லட்சம் மக்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், பல லட்சம் மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளிலும், ஐரோப்பிய நாடுகளிலும் அகதிகளாக தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், ரஷ்ய அரசின் உதவியுடன் கிளர்ச்சியாளர்கள் மீது சிரியா வான்வழி தாக்குதல் நடத்தப்படும் இடங்களில் ஒயிட் ஹெல்மெட் நபர்கள் அதிக அளவில் காணப்படுகின்றனர்.
சிரிய உள்நாட்டு போர் துவங்கிய பின்னர் 2014 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது ஒயிட் ஹெல்மெட்ஸ் தன்னார்வ அமைப்பு.

ஜேம்ஸ் லி மெசுரியர் நிறுவிய இந்த அமைப்பில் சுமார் 3000 தன்னார்வலர்கள் உள்ளனர்.
ஒயிட் ஹெல்மெட்ஸ் தன்னார்வ அமைப்பில் செயலபட்டுவரும் பெரும்பாலனவர்கள் பொறியாளர்கள், ஓவியர்கள், வங்கி அதிகாரிகள், மாணவர்கள் என தெரியவந்துள்ளது.
இவர்கள் போரில் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றி மருத்துவம்னையில் சேர்த்து முதலுதவியும் செய்கின்றனர்.
இந்த ஒயிட் ஹெல்மெட் உதவியாளர்களையும் விட்டு வைப்பதில்லை சிரிய அரசு படைகள். இதுவரை 159 ஒயிட் ஹெல் தன்னார்வலர்கள் வான் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் சிரியாவில் நடக்கும் அட்டூழியங்களை சமூக வலைதளங்களிலும் இவர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
சிரியாவின் ஒயிட் ஹெல்மெட்ஸ் வீரர்கள் பற்றி தெரியுமா? - Reviewed by Author on March 02, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.