அண்மைய செய்திகள்

recent
-

அண்மையில் நாட்டில் ஏற்பட்ட வன்முறைகள் தொடர்பாக மன்னார் மாவட்ட சர்வமதப் பேரவை விடுக்கும் அறிக்கை...



 அண்மைக் காலங்களில் இந்த நாட்டில் மதங்களுக்கிடையில்  இனங்களுக்கிடையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் இந்த நாட்டு மக்கள் அனைவரையும் மீண்டும் ஒரு தடவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
‘நல்லாட்சி அரசாங்கம்’ என்று தன்னைச் சொல்லிக்கொள்கின்ற இன்றைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் இத்தகைய வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை இன்னும் அதிக ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பிட்ட இடங்களில் நடைபெற்ற இந்த வன்முறைச் சம்பவங்களால் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் முறுகல் நிலையும் பதட்ட நிலையும் ஏற்பட்டுள்ளன. இந்த நாடு மீண்டும் ஒரு இருண்ட யுகத்திற்குள் சென்றுவிடுமோ என்ற அச்சமும் ஆதங்கமும் நல்மனம் கொண்ட அனைவர் மத்தியிலும்  ஏற்பட்டுள்ளது.

  இந்த நிலைமை தொடர்பாக மன்னார் மாவட்ட சர்வமதப் பேரவையினராகிய நாம் எமது ஆழ்ந்த கவலையையும் அக்கறையையும் வெளிப்படுத்துமுகமாக இந்த அறிக்கையை வெளியிடுகின்றோம். அனைத்துவிதமான இன-மத வன்முறைகளையும் நாம் கண்டிப்பதோடு இத்தகைய வன்முறைச் சம்பவங்கள் மீண்டும் இந்த நாட்டில் ஏற்படாமல் இருக்க  அனைவரும் முயற்சிக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன்வைக்கின்றோம். 
  உலகத்தில் இருக்கக்கூடிய நான்கு முக்கிய மதங்களைக் கொண்ட இந்த நாட்டில் மத வன்முறைகளும்  இன வன்முறைகளும் பல்லாண்டுகளாகத் தொடர்ந்துகொண்டு இருப்பது மிகவும் கவலை அளிக்கும் ஒரு யதார்த்தமாகும்.
ஒவ்வொரு மதத்திலும் கூறப்பட்டுள்ள நல்விழுமியங்களைக் கடைப்பிடித்தால் இந்த நாடு வேற்றுமையில் ஒற்றுமை காணும் இடமாகவும்ää அமைதிப் பூங்காவாகவும் திகழும் என்பது திண்ணம்.


  மன்னார் மாவட்டத்திலும் வடமாகாணத்தின் ஏனைய பகுதிகளிலும் அண்மைக் காலங்களில் கிறிஸ்தவ சமயத் திருச்சுருபங்கள் மற்றும் இந்துசமயப் புனிதச்சிலைகள் இனம்தெரியாதோரால் உடைக்கப்பட்டுள்ளன. இத்தகைய சம்பவங்களால் இறைநம்பிக்கையாளர்களின் மனங்கள் பெரிதும் புண்படுத்தப்பட்டுள்ளன. இதைவிட கிறிஸ்தவ இந்து-பௌத்த சுருபங்கள் மற்றும் சிலைகள் சட்டத்திற்கு முரணான வகையிலும்ää ஏனைய மதத்தவர்களின் மனங்களைப் புண்படுத்தும் வகையிலும் வைக்கப்பட்டுள்ளன. இந்நடவடிக்கைகளால் சமயங்களுடையில் முறுகல் நிலையும் சந்தேக மனப்பான்மையும் இடைவெளியும் அதிகரித்து வருகின்றன.

  அண்மையில் அம்பாறையிலும் கண்டியிலும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் இனவன்முறையின் உச்சத்தை மீண்டும் ஒரு தடவை இந்த நாட்டிற்கும் உலகத்திற்கும் காட்டியுள்ளது. அப்பாவி மக்களின் வீடுகள்ää வியாபார நிலையங்கள் தாக்கி அழிக்கப்பட்டதோடு வணக்கஸ்தலங்களான பள்ளிவாசல்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. ஒருசில தனிநபர்களுக்கிடையில் ஏற்பட்ட சிறு பிரச்சினை ஒரு இனத்திற்கு எதிரான திட்டமிட்ட தாக்குதல்களாக விரிவடைந்தமை ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது.

  தம்மை மதப்பற்றாளர்கள் அல்லது இனப்பற்றாளர்கள் எனக்கூறிக்கொள்ளும் ஒருசிலரின் தீவிரப்போக்குகளே இத்தகைய மத-இன வன்முறைகளுக்கு காரணமாக இருக்கின்றன. தமது மதத்தை தமது இனத்தை தாம் அதிகம் நேசிப்பவர்கள் என நினைத்துக்கொள்ளும் இவர்கள்தான் உண்மையில் அந்த மதத்திற்கும் இனத்திற்கும் எதிரானவர்கள். இத்தகையவர்களால்தான் அந்த மதமும் இனமும் அவமானத்திற்கும் சங்கடத்திற்கும்  உள்ளாகின்றன.
  இத்தகையை வன்முறைகளுக்குக் காரணமானவர்களை இனங்கண்டு சட்டத்தின்முன் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசாங்கத்தைக் கோரிநிற்கின்றோம். ஏற்பட்ட உயிர் உடமை இழப்புக்களுக்கு உரிய நிவாரணங்களைக் காலம் தாழ்த்தாது வழங்குமாறும் அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறோம்.

  இன-மத வன்முறைகளைத் தோற்றுவிக்கின்றவர்கள் மட்டில் அவதானமாக இருக்கும்படி அனைத்து மக்களையும் கேட்டுக்கொள்வதோடு  வீணான வதந்திகளுக்கும்ää பொய்ப்பிரச்சாரத்திற்கும் இரையாகாமல் கவனமாக இருக்குமாறும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
  நாம் அனைவரும் நம்மோடு வாழும் ஏனைய இன-மத மக்களை சகோதரர்களாக ஏற்று அன்பு  செய்வோமாக. அவர்களின் உரிமைகளை நிலைநாட்ட ஆவன செய்வோமாக. இன-மத நல்லிணக்கத்தை நிலைநாட்ட நாம் அனைவரும் நம்மை அர்ப்பணிப்போமாக.

-    மன்னார் மாவட்ட சர்வமதப் பேரவை-
அண்மையில் நாட்டில் ஏற்பட்ட வன்முறைகள் தொடர்பாக மன்னார் மாவட்ட சர்வமதப் பேரவை விடுக்கும் அறிக்கை... Reviewed by Author on March 15, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.