அண்மைய செய்திகள்

recent
-

ரஷ்யாவின் ரசாயன வாயு தாக்கத்தால் பிரித்தானியர்கள் பாதிப்பு: தெரசா மே அதிர்ச்சி தகவல் -


ரஷ்ய முன்னாள் உளவாளி மீது ரசாயன தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. இந்நிலையில் தாக்குதல் நடத்தப்பட்ட Salisbury பகுதியில் உள்ள சுமார் 130 பொதுமக்களுக்கும் அந்த ரசாயன நச்சுபாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று பிரித்தானியா பிரதமர் தெரசா மே சந்தேகம் தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற நாடாளுமனற கூட்டத்தில் பேசிய அவர் ரஷ்யா ரசாயன தாக்குதல் நடத்திய Salisbury பகுதியில் இங்கிலாந்தின் பொது சுகாதர துறை நடத்திய ஆய்வில் அங்கு வசிக்கும் சுமார் 130 பொதுமக்களுக்கு இந்த நச்சுவாயுவின் தாக்கம் ஏற்பட்டிருக்கலாம் என அறிக்கை அளித்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

ரஷ்யாவுடன் எந்த முன்பகையும் இல்லை எனவும் ஆனால் பிரித்தானியாவின் நலன்களுக்கு எதிரான வேலையில் ரஷ்யா அரசாங்கம் ஈடுபடுவதாக அவர் குற்றம் சாட்டினார்.
ரஷ்யாவின் இந்த மோசமான நடவடிக்கையை கண்டித்து 18 நாடுகள் ரஷ்ய தூதர்களை தங்கள் நாட்டை விட்டு வெளியேற்ற தீர்மானித்துள்ளதையும் தெரசா மே நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக ரஷ்யாவின் இந்த செயல்பாடு அமைந்துள்ளது என குறிப்பிட்ட மே, இந்த விவகாரம் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி வருவதையும் அவர் குறிப்பிட்டு பேசினார்.
மேலும் இது தொடர்பாக தமது அரசு தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் முன்னாள் உளவாளியான Sergei Skripal மற்றும் அவரது மகள் ஆகிய இருவர் மீதும் நரம்பு மண்டலத்தை பாதிக்கும் ரசாயன தக்குதல் நடத்தப்பட்டு அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதை தொடர்ந்து இந்த விவகாரத்தில் பிரித்தானியாவுக்கு பல்வேறு நாடுகளும் ஆதரவு தெரிவித்து ரஷ்ய நாட்டு தூதர்களை தங்கள் நாட்டை விட்டு வெளியேற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவின் ரசாயன வாயு தாக்கத்தால் பிரித்தானியர்கள் பாதிப்பு: தெரசா மே அதிர்ச்சி தகவல் - Reviewed by Author on March 28, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.