அண்மைய செய்திகள்

recent
-

ஏலம் விடப்படும் டொனால்ட் ட்ரம்பின் நிர்வாண சிலை: ஆரம்ப விலை எவ்வளவு தெரியுமா? -


அமெரிக்காவில் பொது இடம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த அமெரிக்க அதிபர் டிரம்பின் நிர்வாண சிலை ஏலத்துக்கு வருகிறது.
20,000 டொலர் முதல் 30,000 டொலர் வரை சிலைக்கு அடிப்படை தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க நகரங்களான சான் பிரான்சிஸ்கோ, லாஸ் ஏஞ்சல்ஸ், கிளீவ்லன்ட், சியாட்டில், மற்றும் நியூயார்க் ஆகிய நகரங்களில் உள்ள முக்கிய இடங்களில் அமெரிக்க அதிபர் தேர்தலின் போது டொனால்டு டிரம்பின் நிர்வாண சிலை வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிர்வாண சிலையை `இண்டிகிளின்’ என்ற குழுவைச் சேர்ந்தவர்கள் வைத்திருந்தனர். மேலும் இந்த சிலைக்கு கீழே ’The Emperor Has No Balls’ என எழுதப்பட்டிருந்தது.
தேர்தல் பிரச்சாரத்தின் போது டொனால்டு டிரம்ப் சர்ச்சை மிகுந்த கருத்துகளை கூறிய போதேல்லாம், இண்டிகிளின் (INDECLINE) குழு அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல வித்தியாசமான வழிகளில் போராட்டம் நடத்திவந்தார்கள்.

இந்நிலையில் இந்த நிர்வாண சிலைகளை ஏலத்தில் விடுவதற்கு இண்டிகிளின் குழு முடிவெடுத்துள்ளது. அடிப்படை விலையாக 20,000 டொலர் முதல் 30,000 டொலர் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஏலம் விடப்படும் டொனால்ட் ட்ரம்பின் நிர்வாண சிலை: ஆரம்ப விலை எவ்வளவு தெரியுமா? - Reviewed by Author on March 28, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.