அண்மைய செய்திகள்

recent
-

பிரித்தானியாவின் யார்க்ஷயர் கடற்கரையில் ஒதுங்கும் மீன்கள்:அதிர்ச்சியில் மக்கள்


பிரித்தானியாவின் யார்க்ஷயர் கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ள மில்லியன் கணக்கிலான மீன்கள் மற்றும் நண்டுகளால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பிரித்தானியாவில் எம்மா புயலால் ஏற்பட்ட சேதங்களில் யார்க்ஷயர் கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ள மீன்கள் மற்றும் நண்டுகளால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
ஆனால் கடற்கரைக்கு வந்த பலரும் பக்கெட்டுகளிலும் பெட்டிகளிலும் மீன்களையும் நண்டுகளையும் அள்ளிக் கொண்டு சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இதனிடையே கரை ஒதுங்கியிருந்த கடல் நண்டுகளில் உயிருடன் இருந்தவற்றை மீனவர் ஒருவர் மீண்டும் கடலிலேயே திருப்பி விட்டுள்ளார்.
யார்க்ஷயர் கடற்கரையானது தற்போது போர் முடிந்த பகுதியாக காட்சி தருவதாகவும், கடற்கரை எங்கும் கடல் உயிரினங்களால் நிரம்பியுள்ளதாகவும் குறித்த மீனவர் தெரிவித்துள்ளார்.
கடல் நீரின் தட்பவெப்பநிலை சுமார் 2 டிக்ரி வரை சரிவடைந்ததே இதற்கு முக்கிக காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கரை ஒதுங்கிய கடல் நண்டுகளை பொதுமக்கள் அள்ளிச் செல்வது வருத்தமளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.






பிரித்தானியாவின் யார்க்ஷயர் கடற்கரையில் ஒதுங்கும் மீன்கள்:அதிர்ச்சியில் மக்கள் Reviewed by Author on March 05, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.