அண்மைய செய்திகள்

recent
-

தொடரும் இனச் சிக்கல்! இலங்கைக்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் எச்சரிக்கை -


பொறுப்புக்கூறல் பொறிமுறையை முன்னெடுப்பதில் இலங்கை தாமதத்தை கடைபிடிக்கின்றமை கவலைக்குரியதாகும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசென் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகளுக்கான 37வது கூட்டத் தொடர் நடந்துவருகின்றது.

ஜெனிவா மனித உரிமை பேரவையில் இன்று நடைபெற்ற இலங்கை ஜெனிவா பிரேரணையை எவ்வாறு அமுல்படுத்தியது என்பது குறித்த விவாதத்தின்போது செய்ட் அல் ஹுசெய்ன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அண்மையில் இலங்கையில் இடம்பெற்ற சிறுபான்மை மக்கள் மீதான இன ரீதியான தாக்குதல் குறித்து நாம் கவலை அடைகிறோம்.
ஐக்கிய நாடுகள் சபையுடன் ஈடுபாட்டுடன் செயற்படும் இலங்கையின் செயற்பாட்டை வரவேற்கின்றோம். எனினும் பொறுப்புக்கூறல் பொறிமுறையை முன்னெடுப்பதில் இலங்கை தாமதத்தை கடைபிடிக்கின்றமை கவலைக்குரியதாகும்.

மேலும் எதிர்வரும் 2019 ஆம் ஆண்டுக்குள் ஜெனிவா பிரேரணையை இலங்கை முழுமையாக அமுல்படுத்தும் என்பது சந்தேகத்துக்குரியதாக மாறியுள்ளது. அத்துடன் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு 20 மாதங்கள் கடந்தே காணாமல்போனோர் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளமை குறித்தும் அதிருப்தியடைகின்றோம்.
அத்துடன் காணிகளை மீள் வழங்குவதில் தாமதம் நீடிக்கின்றது. காணிகளை தொடர்ந்து அபகரித்தால் நம்பிக்கை கட்டியெழுப்புவது கடினமாகும். மேலும் காணிகளுக்கான நட்ட ஈடுகள் சுயாதீன பொறிமுறைகள் ஊடாக முன்னெடுக்கப்பட வேண்டும்.

கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலினால் 12 நாட்களுக்கு அவசரகால நிலையை கொண்டுவர நேர்ந்தது. சித்திவரதைகள் தொடர்வதாகவும் மனிதஉரிமை காப்பாளர்களை கண்காணிப்பது தொடர்பாகவும் அறிக்கையிடப்படுகிறது.
எப்படியும் இலங்கையின் இந்த நிலைமை தொடர்பிலும் நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் குறித்தும் ஐ.நா. மனித உரிமை பேரவை அவதானத்துடவன் இருக்க வேண்டும் என கோருகிறோம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடரும் இனச் சிக்கல்! இலங்கைக்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் எச்சரிக்கை - Reviewed by Author on March 22, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.