அண்மைய செய்திகள்

recent
-

காலையில் கண்விழித்ததும் ஏன் உள்ளங்கைகளை பார்க்க வேண்டும்? -


காலையில் கண் விழித்ததும் கண்டதையெல்லாம் பார்க்க கூடாது என்றும் உள்ளங்கைகளை பார்ப்பது தான் உத்தமம் என்று நம் முன்னோர்கள் அடிக்கடி நம்மிடம் கூறுவதுண்டு.
இறையுருவத்தின் பெருமையை கைகள் வெளிப்படுத்தும், இறை உருவங்கள், அபய வரத முத்திரைகளைத் தாங்கிய திருக்கரங்களை கடவுளுக்குச் சமானமாகச் சொல்கிறது வேதம்.
உள்ளங்கையின் நுனியில் அலைமகளும், நடுவில் கலைமகளும் அடிப்பக்கத்தில் கோவிந்தனும் இருப்பதாகப் புராணம் சொல்கிறது.
ஹஸ்தரேகா என்ற சாஸ்திரம் கையை வைத்து உருவானது. அறிவு, செல்வம், ஆன்மிகம் ஆகிய மூன்றையும் பெற காலையில் எழுந்ததும் உள்ளங்கைகளைப் பார்க்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி பசுமையான விருட்சங்கள் கனி பூ வலம்புரிசங்கு நிலைக்கண்ணாடி தெய்வத்தின் திருவுருவப்படங்களை போன்றவற்றை பார்ப்பது சிறந்ததே.
இது மட்டுமல்லாமல்,
கராக்ரே வஸதெ லஷ்மீ கரமத்யே ஸரஸ்வதி
கரமூலேது கோவிந்த: ப்ரபாதெ கரதர்சனம்
என்ற ஸ்லோகத்தை காலையில் விழித்தவுடன் உள்ளங்கையை பார்க்கும் போது கூற வேண்டும். இவ்வாறு செய்வதனால் அன்று முழுவது அந்த நாள் மிகவும் சந்தொஷமாக அமையும் என்று சொல்ப்படுகின்றது.


காலையில் கண்விழித்ததும் ஏன் உள்ளங்கைகளை பார்க்க வேண்டும்? - Reviewed by Author on March 12, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.