அண்மைய செய்திகள்

recent
-

13 ஆண்டுகள் உறைய வைக்கப்பட்ட கருவால் தாயான 43 வயது பெண்மணி -


அமெரிக்காவின் ஜோர்ஜியா மாகாணத்தில் 13 ஆண்டுகள் உறைய வைக்கப்பட்டிருந்த கருவினை பயன்படுத்தி 43 வயது பெண்மணி ஒருவர் தாய்மை அடைந்துள்ளார்.
ஜோர்ஜியா மாகாணத்தில் அமைந்துள்ள அட்லாண்டா நகர பெண்மணியே கருவினை தத்தெடுக்கும் முறைப்படி நீண்ட 2 ஆண்டுகள் போராட்டத்திற்கு பின்னர் தற்போது தாய்மை அடைந்துள்ளார்.
43 வயதாகும் Nancy மற்றும் Chris Weiss தம்பதிகள் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் லூனா என பெயரிடப்பட்டுள்ள தங்கள் மகளை பெற்றெடுத்துள்ளனர்.

நீண்ட 2 ஆண்டுகள் போராட்டத்தின் பின்னரே குறித்த தம்பதிகளுக்கு இந்த மகிழ்ச்சியான தருணத்தை அனுபவிக்கும் வாய்ப்பு அமைந்தது.
இயற்கையாக கருத்தரிக்கும் முயற்சியில் 6 மாதங்கள் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளனர் Nancy மற்றும் Chris Weiss தம்பதிகள்.
ஆனால் அதில் எந்த முன்னேற்றமும் இருப்பதாக அவர்களுக்கு தென்படவில்லை. இதனையடுத்து IVF முறைப்படி முயற்சி செய்துள்ளனர்.

5 முறை முயற்சித்தும் தோல்வியே மிஞ்சியது. இதனையடுத்தே கரு தத்தெடுக்கும் முறை குறித்து Nancy மற்றும் Chris Weiss தம்பதிகளுக்கு தெரிய வந்துள்ளது.
கரு தத்தெடுக்கும் முறையில் பாதிக்கு பாதி வாய்ப்புகளே உள்ள நிலையிலும் அவர்களின் நம்பிக்கை 100 சதவிகிதம் இருந்தது.
இதனால் முதல் முயற்சியிலேயே நான்சி கர்ப்பமானார். இந்த நிலையில் ஆர்வ மிகுதியால் தாம் தத்தெடுத்துள்ள கரு குறித்து தகவல் திரட்டியவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

குறித்த கருவானது கடந்த 2004 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் உறைய வைக்கப்படிருந்தது நான்சிக்கு தெரிய வந்தது.
இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் அழகான பெண்குழந்தையை பெற்றெடுத்துள்ளனர்.
தற்போது Nancy மற்றும் Chris Weiss தம்பதியினர் கரு தத்தெடுக்கும் முறையை பிரபலப்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

13 ஆண்டுகள் உறைய வைக்கப்பட்ட கருவால் தாயான 43 வயது பெண்மணி - Reviewed by Author on April 09, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.