அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாணவர்களுக்கு இலவசமாய் பயிற்சி……விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது


மன்னார் மாணவர்களுக்கு இலவசமாய் பயிற்சி……
க.பொ.த சாதாரணதர பரீட்சையில்சித்திடைய தவறிய மாணவர்களுக்கான 13வருட உத்தரவாதக்கல்விச்செயற்திட்டம்-
13th Year Guaranteed Education நடைபெறுகின்றது.

மன்னார் மாவட்டத்தில் கடந்த 2017ம் வருடத்தில் இருந்து மன்.சித்திவிநாயகர் இந்துக்கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றுவருகின்றது.
2017 க.பொ.த சாதாரண தரத்தில் சித்தியடைய தவறிய மாணவர்களை உள்ளடக்கியதாக 26 பாடப்பரப்புக்களில் 03கட்டங்களாக விரும்பிய பாடங்களை தெரிவு செய்து கற்றுக்கொள்ளலாம்.
1.   

1.   Child Psychology & Care
2.   Health & Social Care
3.   Physical Education &Sports
4.   Performing Arts
5.   Event Management
6.   Arts &Crafts
7.   Ingenior Designing
8.   Fashion  Desigining
9.   Graphic Desigining
10.                     Arts & Desigining
11.                     Landscaping
12.                     Applied Hotal Studies
13.                     Letharing Products Studies
14.                     Food Proccing Studies
15.                     Aquatic Studies
16.                     Pilanation Studies
17.                     Construction Studies
18.                     AutoMobile Studies
19.                     Elcterical &Electronice Studies
20.                     Txtile Apparel Studies
21.                     Metal Babrication Studies
22.                     Aluminium Fitting & Babrication Studies
23.                     Software Develament
24.                     Web Designing
25.                     Tourism & Hospitality
26.                     Enviromental  Studies

மேற்குறித்த 26பாடப்பரப்புக்களில் பொதுத்தேர்ச்சி பயிற்சியாக கீழ் உள்ள 09 பாடங்களும் 03மாதங்களும் கற்பிக்கப்படும்
1.  


1.   Business/Communication English (Syllabus&modulas)
2.   Business/Communcation  English(Activity Book)
3.   Computer Literacy(Sellabus&Modules)
4.   Entrepreneurship (Syllabyus&Moudles)
5.   Aeshtsetic (Syllabyus &Moudlesz)
6.   Tamil (Syllabyus &Moudlesz)
7.   Civies (Syllabyus &Moudlesz)
8.   Health sence (Syllabyus &Moudlesz)
9.   Career Guidence

அத்துடன் தொழிற்பயிற்சி கல்வியாக
1.   


1.   Txtiles& Apparel Studies
2.   Web Designing
3.   Tourism & Hospitality
4.   Aluminium  Fitting &Babrication Studies
5.   Event Management
6.   Landscaping
7.   Sports Activities
8.   Aquatiec Studies

08ப்பாடங்களும் 06மாதங்கள் கற்பிக்கப்பட்டு 03வருடத்திற்காக தெரிவு செய்த ஒரு துறையில் பயிற்சிக்காக அனுப்பப்படுவார்கள் அத்துடன் பயிற்சியினை ஒழுங்காக நிறைவுசெய்யும் மாணவர்களுக்கு NVQ-04 சான்றிதழ் வழங்கப்படும் அத்துடன் தொடர்சிசியாக கற்று NVQ-05-06-07 வரை சான்றிதழ்  பெறலாம் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பும் உள்ளது பட்டதாரியாக வெளியில்வரலாம் அதற்கு முதலில் நாம் எம்மை சரியான முறையில் தயார் படுத்தல் வேண்டும்.

 பரிட்சையில சித்தியடையவில்லை என்று கவலைப்பட்டுக்கொண்டு இருப்பதாலும் சும்மா காலத்தினைக்கழிப்பதாலும் பயன் ஒன்றும் இல்லை சும்மா சுற்றித்திரிவதும் வீட்டில் இருப்பதும் இப்போது சுகமாய் ஆனந்தமாய் இருக்கும் கொஞ்சக்காலம் போனதும் நிலமை மிகவும் மோசமாகி விடும்.
 எனவே மாணவமாணவிகளே முடிந்ததை எண்ணிக்கவலைப்பட்டுக்கொண்டு இராமல் இனி என்ன செய்யலாம் என்பதை தெளிவாக முடிவு செய்யுங்கள்.

கற்கவிரும்புபவர்கள் கற்கலாம் பாடசாலை செல்வது போல்தான் இருக்கும் நீங்களும் மாணவர்கள் தான் எந்தவிதமான வேறுபாடுமின்றி தரமான பயிற்றப்பட்ட 23 ஆசிரியர்களால் சகல வசதிகளும் அடங்கிய வகுப்பறையில் உங்களுக்கான முழுமையான பயிற்சிகள் வழங்கப்படுகின்றது.
முதல் 41மாணவர்கள் கொண்ட குழு பயிற்சியை நிறைவு செய்துள்ளனர் அவர்கள் மேலதிகப்பயிற்சியினை பெறவுள்ளனர் அத்தோடு இம்மாதம் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.

துற்போது மன.சித்திவிநாயகர் இந்துக்கல்லூரியில் நடைபெறும்  பயிற்சி மிகவிரைவில் மன்.அல்-அஷ்ஹர் தேசிய பாடசாலையிலும் பரிகாரிகண்டல் வட்டக்கண்டல் போன்ற பகுதிகளில் உள்ள பாடசாலைகளிலும் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.

மாணவர்களின் நலனைக்கருத்தில் கொண்டு அரசாங்கம் 10இலட்சம் ரூபாவினை செலவு செய்கின்றது சிந்தியுங்கள்.

இலவசமாய் ஊக்குவிப்பு கொடுப்பனவுகளுடன் உங்களுக்கான எதிர்காலத்தினை நீங்களே உருவாக்கிட இன்றே பதிவுகளை மேற்கொள்ளுங்கள்.

கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் என்ற நல்வாசகத்திற்கு ஏற்றால் போல் உங்கள் வளமான வாழ்வை நீங்களே……..



மன்.சித்திவிநாயகர் இந்துக்கல்லூரியில்.....
விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.

கவலை விடுங்கள் கல்வியை தொடருங்கள்.....
-வை.கஜேந்திரன்-











மன்னார் மாணவர்களுக்கு இலவசமாய் பயிற்சி……விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது Reviewed by Author on April 29, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.