அண்மைய செய்திகள்

recent
-

வடகொரியாவில் அவசர கூட்டம்: நாட்டின் முக்கிய தலைவர்கள் பங்கேற்பு -


அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடனான சந்திப்புக்கு முன்னர் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் தொடர்பில் ஆலோசனை நடத்தவே இந்த அவசர கூட்டத்தை வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் கூட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியுடனான சந்திப்பு உடனடியாக நடைபெற வாய்ப்பு உள்ளதாக வடகொரிய தரப்பு அறிவித்துள்ளது.
ஆனால் பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து குறித்த சந்திப்பானது எந்த நகரத்தில் வைத்து மேற்கொள்ளலாம் என்ற கேள்விக்கு இதுவரை இரு நாடுகளும் பதிலளிக்கவில்லை.

இந்த நிலையில் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் உடன் அமெரிக்க சி.ஐ.ஏ தலைவர் Mike Pompeo கடந்த வாரம் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
மிக ராகசியமாக நடந்த சந்திப்பை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வரவேற்றுள்ளதுடன், நல்ல துவக்கம் என பாராட்டினார்.
இந்த சந்திப்பானது சர்வதேச அளவில் நன்மை பயக்கும் என்பது மட்டுமல்ல, வடகொரியாவுக்கும் அதிக பலனை தருவதாக அமையும் என்றார்.
முன்னதாக வட மற்றும் தென் கொரிய நாடுகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து 60 ஆண்டுகால பனிப்போரை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியில் களம் கண்டுள்ளனர்.

வடகொரியாவில் அவசர கூட்டம்: நாட்டின் முக்கிய தலைவர்கள் பங்கேற்பு - Reviewed by Author on April 19, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.