அண்மைய செய்திகள்

recent
-

உலகின் சிறந்த தலைவர்களின் பட்டியல்: முதலிடம் யார் தெரியுமா? -


ஃபார்ச்சூன் பத்திரிகை வெளியிட்ட உலகின் சிறந்த தலைவர்களின் பட்டியலில் முதலிடத்தை துப்பாக்கி கலாச்சாரத்துக்கு எதிரான இயக்கத்தை முன்னெடுத்த பாடசாலை மாணவர்கள் தட்டிச் சென்றுள்ளனர்.
அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஃபார்ச்சூன் பத்திரிகை 2018 ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்த 50 தலைவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில், அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்துக்கு எதிரான இயக்கத்தை முன்னெடுத்த பாடசாலை மாணவர்கள் முதலிடத்தை பிடித்துள்ளனர்.
இரண்டாவது இடத்தில் மலேரியா நோய் தொற்றுக்கு எதிராக சீரிய பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மிலின்டா கேட்ஸ் உள்ளனர்.

3-வது இடத்தில் பாலியல் சீண்டல்களுக்கு எதிராக Me Too இயக்கத்தை முன்னெடுத்த சமூக ஆர்வலர் Tarana Burke உள்ளார்.
4-வது இடத்தில் தென் கொரியாவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தி வரும் அங்குள்ள ஜனாதிபதி மூன் ஜே இன் உள்ளார்.
11-வது இடத்தில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் உள்ளார். 24-வது இடத்தில் இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானி உள்ளார்.
43-வது இடத்தில், இந்தியாவில் ஏழைகளுக்கான கட்டடக் கலைஞர் என புகழப்படும் கட்டுமான நிபுணர் பாலகிருஷ்ண தோஸி உள்ளார்.
முதல் 10 இடங்களை கைப்பற்றிய தலைவர்கள்:
  1. அமெரிக்க பாடசாலை மாணவர்கள்
  2. பில் மற்றும் மிலின்டா கேட்ஸ்
  3. Me Too இயக்கம்
  4. மூன் ஜே இன், தென் கொரிய ஜனாதிபதி
  5. கென்னத் ஃப்ராஜியர், Merck நிறுவனம்
  6. ஸ்காட் கோட்லிப்
  7. மார்கரேத் விஸ்டேஜர்
  8. லாரி பிங்க்
  9. ஜெனரல் ஜோசப் டன்ஃபோர்ட்
  10. Liu He, சீனா துணை அதிபர்
உலகின் சிறந்த தலைவர்களின் பட்டியல்: முதலிடம் யார் தெரியுமா? - Reviewed by Author on April 20, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.