அண்மைய செய்திகள்

recent
-

மே 18ஆம் திகதி தமிழின அழிப்பு தினமாக பிரகடனம் -


முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு நாளான மே 18ஆம் திகதி தமிழ் இன அழிப்பு தினமாக பிரகடனம் செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வடமாகாண சபையின் 122ஆவது அமர்வு இன்று கைதடியில் உள்ள பேரவைச் செயலகத்தில் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் ஆரம்பமானது.

இதன்போது, சிறுவர் மகளீர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் மே 18 ஆம் திகதியை இனஅழிப்பு நாளாக பிரகடனம் செய்யும்படி சபையில் முன்மொழிந்தார். கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் மீது இன அழிப்பு முன்னெடுக்கப்பட்டது. மே 18 ஆம் திகதியினை இனஅழிப்பு நாளாக பிரகடனம் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, உலக தமிழ் மக்கள் அனைவரும் இனஅழிப்பு நாளான மே 18 ஆம் திகதியினை துக்க தினமாக அனுஷ்டிக்குமாறும் கோர வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதன்போது, சபையில் சகல உறுப்பினர்களும் ஏக மனதாக ஏற்றுக்கொண்டதன் பிரகாரம், மே 18ஆம் திகதியினை இனஅழிப்பு நாளாக பிரகடனம் செய்வதாக தீர்மானம் எடுக்கப்படுவதாக அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் அறிவித்துள்ளார்.
மே 18ஆம் திகதி தமிழின அழிப்பு தினமாக பிரகடனம் - Reviewed by Author on May 10, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.