அண்மைய செய்திகள்

recent
-

244 ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்ட ஒயின்: எத்தனை கோடிக்கு ஏலம் போனது தெரியுமா? -


பிரான்சில் 244 ஆண்டுகளுக்கும் முன் தயாரிக்கப்பட்ட ஒயின் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.

பிரான்சின் Jura Encheres பகுதியின் Lons-le-Saunier என்ற இடத்தில் கடந்த சனிக்கிழமை உலகின் மிகப் பழமையான ஒயின் ஏலத்திற்கு விடப்பட்டுள்ளது.
Jura மாகாணத்தில் கடந்த 1774-ஆம் ஆண்டு இந்த ஒயின் தயாரிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு நடத்தப்பட்ட ஏலத்தில் அந்த ஒயின் பாட்டில் 120,800 அமெரிக்க டொலர்(இலங்கை மதிப்பு 1,90,80,360 ரூபாய்) கொடுத்து எடுக்கப்பட்டுள்ளது.

இதே போன்று மூன்று பாட்டில்கள் அதிக விலைக்கு போயுள்ளதாகவும், அதில் இதுவே முதல் இடத்தை பிடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பாட்டில்களை ஏலத்திற்கு எடுத்தவர்கள் கனடா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

244 ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்ட ஒயின்: எத்தனை கோடிக்கு ஏலம் போனது தெரியுமா? - Reviewed by Author on May 29, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.