அண்மைய செய்திகள்

recent
-

46 ஆண்டுகளாக பர்கர் சாப்பிடும் நபர்: இதுவரை எத்தனை சாப்பிட்டுள்ளார்


அமெரிக்காவை சேர்ந்த ஓய்வுபெற்ற சிறைக்காவலர் ஒருவர் 46 ஆண்டுகளாக பர்கர் சாப்பிட்டு சாதனை படைத்துள்ளார்.

28,788 Big Mac எனப்படும் பர்கர் சாப்பிட்டதற்காக, 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்திருந்தார்.
46 ஆண்டுகளாக தொடர்ந்து பர்கர் சாப்பிட்டு வந்ததில், அதன் எண்ணிக்கை இரண்டு நாட்களுக்கு முன்பு 30,000 பர்கர் என்ற எண்ணிக்கையை எட்டியுள்ளது.
இதுகுறித்து அவர் கூறியதாவது, ஒரு நாளைக்கு இரண்டு தடவை பர்கர் சாப்பிடுவேன், கடந்த 46 ஆண்டுகளில் 8 நாட்கள் மட்டுமே பர்கர் சாப்பிடாமல் இருந்துள்ளேன்.

இதனால் எனது ஆரோக்கியம் எவ்விதத்திலும் பாதிக்கப்படவில்லை. 86 கிலோ எடையில் குதிரையை போல ஆரோக்கியமாக இருக்கிறேன் என்றும் பர்கரில் உள்ள சோஸ் எனக்கு மிகவும் பிடிக்கும் என கூறியுள்ளார்.
1972 ஆம் ஆண்டிலிருந்து பர்கர் வாங்கியதற்கான ரசீதை பத்திரப்படுத்தி வைத்துள்ளார்.

46 ஆண்டுகளாக பர்கர் சாப்பிடும் நபர்: இதுவரை எத்தனை சாப்பிட்டுள்ளார் Reviewed by Author on May 09, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.