அண்மைய செய்திகள்

recent
-

இறுதிக்கட்ட போரில் 40000 தமிழர்கள் கொலை! புதிய தகவல்களுடன் பிரித்தானிய பிரபு -


இறுதிக்கட்ட போரின் பெருந்தொகை தமிழர்கள் கொல்லப்பட்டமை குறித்து பிரித்தானிய பிரபுக்கள் சபையின் உறுப்பினர் நேஸ்பி உரையாற்றவுள்ளார்.
இது தொடர்பில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் பிரித்தானியா நாடாளுமன்றத்தில் நேஸ்பி உரையாற்றவுள்ளார் என சிங்கள ஊடகம் ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இறுதிக்கட்ட யுத்தத்தின் பொது 40 ஆயிரம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதாக இலங்கை மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனினும் 5000 - 7000 வரையான தமிழர்களே கொல்லப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவ நடவடிக்கையின் போது உயிரிழந்த மக்களின் எண்ணிக்கை 7000 - 5000 இடைப்பட்டதாகும், என நேஸ்பியின் இரகசிய கடிதங்கள் மூலம் தெரியவந்ததாக ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

39 பக்கத்திலான இரகசிய கடிதம் நேஸ்பியினால் குறித்த ஊடகத்திற்கு மாத்திரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆவணங்களுக்கமைய ஜெனிவா யோசனையை மீண்டும் விசாரிக்க வேண்டும் நேஸ்பி மனித உரிமைய ஆணைக்குழுவில் கோரிக்கை விடுத்த போதிலும், இலங்கை அரசாங்கம் இதுவரையில் அவ்வாறான கோரிக்கையை விடுக்கவில்லை.

நேஸ்பி ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவுக்கு அனுப்பிய அந்த இரகசிய கடிதங்கள் ஆணைக்குழுவினால் மூடி மறைக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை இறுதிக்கட்ட போரின் போது 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டதாக ஆதாரபூர்வமாக ஐக்கிய நாடுகள் சபை தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இறுதிக்கட்ட போரில் 40000 தமிழர்கள் கொலை! புதிய தகவல்களுடன் பிரித்தானிய பிரபு - Reviewed by Author on May 08, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.