அண்மைய செய்திகள்

recent
-

கிரிக்கெட் வரலாற்றில் அதிக ஓட்டங்கள் குவித்த இடதுகை வீரர்கள்: முதலிடத்தில் இலங்கை வீரர் -


சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் குவித்த இடதுகை துடுப்பாட்ட வீரர்கள் பட்டியலில் இலங்கை ஜாம்பவான் குமார் சங்ககாரா முதலிடத்தில் உள்ளார்.

சங்ககாரா மொத்தமாக 28016 ஓட்டங்களை 46.17 சராசரியுடன் எடுத்துள்ளார், இரண்டாமிடத்தில் வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் பிரெயன் லாரா 22358 ஓட்டங்களை 46.28 என்ற சராசரியுடன் எடுத்துள்ளார்.
மூன்றாமிடத்தில் சனத் ஜெயசூர்யா 34.14 என்ற சராசரியுடன் 21032 ஓட்டங்கள் எடுத்துள்ள நிலையில் நான்காம் இடத்தில் உள்ள சந்தர்பால் 45.72 என்ற சராசரியுடன் 20988 ஓட்டங்களை குவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் வீரர் கங்குலி 18575 ஓட்டங்களை 41.46 என்ற சராசரியில் எடுத்து பட்டியலில் ஐந்தாவது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் அதிரடி ஆட்டக்காரர் கெய்ல் 18388 ஓட்டங்களை 38.54 என்ற சராசரியுடன் எடுத்து ஆறாவது இடத்திலும் உள்ளனர்.

கிரிக்கெட் வரலாற்றில் அதிக ஓட்டங்கள் குவித்த இடதுகை வீரர்கள்: முதலிடத்தில் இலங்கை வீரர் - Reviewed by Author on May 20, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.