அண்மைய செய்திகள்

recent
-

சாதனைக்கு மேல் சாதனை படைத்துள்ள சென்னை அணி -


டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பல சாதனைகளை முறியடித்துள்ளதுடன், புதிய சாதனைகளையும் படைத்துள்ளது.

நேற்று நடந்த ஐ.பி.எல் லீக் போட்டியில், சென்னை அணி 4 விக்கெட் இழப்புக்கு 211 ஓட்டங்கள் குவித்தது. பின்னர் ஆடிய டெல்லி அணி 5 விக்கெட் இழப்புக்கு 198 ஓட்டங்களே எடுத்து தோல்வியை தழுவியது.
இந்நிலையில் சென்னை அணியும், அணி வீரர்களும் புதிய சாதனையை படைத்து இருக்கிறார்கள்.

சென்னை அணி நேற்று 211 ஓட்டங்கள் எடுத்ததன் மூலம், ஐ.பி.எல் போட்டிகளில் அதிக முறை 200க்கும் அதிகமான ஓட்டங்கள் எடுத்துள்ள அணி என்ற பெருமையை பெற்றுள்ளது. சென்னை இதுவரை 16 முறை 200 ஓட்டங்களை கடந்துள்ளது. அதேபோல் 200 ஓட்டங்கள் இலக்கினை விரட்டிப் பிடிப்பதில் 90 சதவித வெற்றியை பெற்றுள்ளது.

ஐ.பி.எல் வரலாற்றில் அதிக வெற்றிகளை பெற்ற இரண்டாவது அணியாக சென்னை உள்ளது. இதுவரை சென்னை அணி 100 வெற்றிகளை பெற்றுள்ளது. மும்பை அணி 105 வெற்றிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.
புனே மைதானத்தில் அடிக்கப்பட்ட அதிகபட்ச Score சென்னை அணி நேற்று அடித்த 211 ஓட்டங்கள் தான். இதற்கு முன்பு டெல்லி அணி 205 ஓட்டங்கள் எடுத்ததே அதிகபட்ச Score ஆக இருந்தது.
நேற்றைய போட்டியில் டோனி 51 ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் ஒரு அணித்தலைவராக அதிக ஓட்டங்கள் (3557) எடுத்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் காம்பீர் (3518) உள்ளார்.

டோனி நேற்று 22 பந்துகளில் அரைசதம் விளாசினார். இது அவரது இரண்டாவது வேகமான அரைசதமாகும். இதற்கு முன்பு அவர் 2013ஆம் ஆண்டில் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் 16 பந்துகளில் அரைசதம் அடித்திருந்தார்.

சாதனைக்கு மேல் சாதனை படைத்துள்ள சென்னை அணி - Reviewed by Author on May 01, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.