அண்மைய செய்திகள்

recent
-

ஆஸ்துமா என்பது என்ன? தவிர்க்க வேண்டிய உணவுகள் -


ஆஸ்துமாவை நோய் என்று சொல்வதை விட நுரையீரலில் ஏற்படுகிற தற்காலிக சீர்குலைவு என்று சொல்லலாம்.
பரம்பரை காரணமும், ஒவ்வாமையும் ஆஸ்துமா வருவதற்கு முக்கிய காரணமாகிறது.

உணவு, உடை, தூசு, புகைப்பிடித்தல், தொழிற்சாலை கழிவுகள் என சுத்தமாக காற்றையே பார்ப்பது அரிதாகிக் கொண்டிருக்கிறது என சொல்லலாம்.
எங்கு பார்த்தாலும் தூசு, மாசடைந்த காற்றையே நாம் சுவாசித்துக் கொண்டிருக்கிறோம்.
இவையெல்லாம் தான் ஆஸ்துமா அதிகரிக்க காரணங்கள், நுரையீரல், மூக்கு, தொண்டை ஆகியவற்றில் நோய்த்தொற்று இருந்தால் ஆஸ்துமாவைத் துண்டும்.
அடுக்குத் தும்மல், மூக்கொழுகுவது, மூக்கடைப்பு, வறட்டு இருமல் போன்றவற்றிற்கு சிகிச்சை எடுக்காத போதும் ஆஸ்துமாவுக்கு வழிவகுக்கும்.

தவிர்ப்பது எப்படி?
ஆஸ்துமாவை முழுமையாக குணப்படுத்த முடியாது என்ற போதிலும், தடுக்க வழிமுறைகள் உள்ளன.
  • வீடு, அலுவலகம், தெரு, சுற்றுச்சூழல் சுத்தமாக இருக்க வேண்டும்.
  • தூசு, குப்பை, அழுகிய உணவுப்பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்திவிட வேண்டும்.
  • சுவர்களில் படங்களை தொங்கவிட்டிருந்தால் அழுக்கு படியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • படுக்கை விரிப்புகள், தலையணை உறைகளை அடிக்கடி மாற்றிவிட வேண்டும்.
  • சுழல் விசிறிக்கு நேராக படுக்க கூடாது, வாசனை திரவியங்கள் அதிகம் பயன்படுத்தக்கூடாது.
  • பைக்கில் வெளியில் செல்பவராக இருந்தால் முகத்தில் மாஸ்க் அணிந்து கொள்வது நல்லது.
  • வளர்ப்பு பிராணிகள், பூந்தோட்டங்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும்.
தவிர்க்க வேண்டிய உணவுகள்
பால், தயிர், முட்டை, மீன், கருவாடு, நண்டு, கடல் மீன், கடலை, பருப்பு வகைகள், கொட்டை வகைகள், வாழைப்பழம், திராட்சைப்பழம், எலுமிச்சை, நெல்லிக்காய், கத்திரிக்காய், கொய்யா, தக்காளி, டால்டா, குளிர்பானங்கள், சர்பத், ரோஸ்மில்க், லஸ்ஸி, கோக் பானங்கள்.

ஆயுர்வேத மருத்துவம்
  • தூதுவளைக் கீரையுடன் மிளகு, சுக்கு, திப்பிலி, தாளிசபத்திரி ஆகியவற்றைச் சேர்த்துக் கஷாயமாக்கி வடிகட்டி தேன் கலந்து சாப்பிட்டால், மூச்சு திணறல், ஆஸ்துமா, குளிர் காய்ச்சல் போன்றவை குறையும்.
  • முசுமுசுக்கைக் கீரையின் சாற்றில் திப்பிலியை ஊறவைத்து, உலர்த்திப் பொடியாக்கி, மூன்று சிட்டிகை அளவு பொடியைத் தேனில் குழைத்து ஒரு வெற்றிலையில் வைத்துச் சாப்பிட்டால் ஆஸ்துமா குறையும்.
  • சிற்றரத்தையை உலர்த்திப் பொடியாக்கிச் சாப்பிட்டால் மூச்சிரைப்பு, ஆஸ்துமா குணமாகும்.
  • பலாப்பழ வேரை வேக வைத்து அந்த நீரோடு, பலாப்பழச் சாற்றைக் கலந்து குடித்தால் ஆஸ்துமா மட்டுப்படும்.
  • கண்டங்கத்திரி செடியை வேருடன் எடுத்து, காய வைத்து, இடித்துப் பொடி செய்து தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா குறையும்.
  • குழந்தைகளுக்கு, காக்கரட்டான் விதைகளை நெய்யில் வறுத்துப் பொடி செய்து 5 அரிசி எடை கொடுத்து வந்தால் ஆஸ்துமா குறையும்.
ஆஸ்துமா என்பது என்ன? தவிர்க்க வேண்டிய உணவுகள் - Reviewed by Author on May 01, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.