அண்மைய செய்திகள்

recent
-

கற்றாழையின் அசர வைக்கும் மருத்துவகுணங்கள் -



சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்கள் நிரம்பப் பெற்ற அற்புத ஆயுர்வேத மூலிகை ஆகும்.
கற்றாழை லில்லியேசி தாவர குடும்பத்தைச் சேர்ந்தது.
அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பில் கற்றாழை பெருமளவு பயன்படுத்தப்படுகின்றது.
தினமும் சோற்றுக் கற்றாழை ஜூஸ் குடிப்பதால் உண்டாகும் நன்மைகளை தெரிந்து கொள்ளுவோம்.
கற்றாழை ஜூஸ் குடிப்பதன் பயன்கள்
  • சோற்றுக் கற்றாழை ஜூஸ் குடிப்பதால் உயர் ரத்த அழுத்தம் குறையும்.
  • கற்றாழை ஜூஸை தினமும் குடித்துக் கொண்டு வந்தால் ஜீரண மண்டலத்தில் உண்டாகும் பாதிப்புகள் குணமாகி ஜீரண உறுப்புகள் இளமையாகவே இருக்கும்.
  • ஹீமோகுளோபின் குறைவாக இருப்பவர்கள் கற்றாழை ஜூஸ் அருந்துவருவது நல்லது.
  • கற்றாழை ஜூஸ் நல்ல மருந்து. ஹார்மோன் சுரப்பை சீர்படுத்துகிறது.
  • கற்றாழை ஜூஸ் குடித்தால் உங்கள் வெளிப்புற அழகிற்கு போடுவதை விட இரு மடங்கு அழகை தரும்.
  • உடல் போஷாக்கு பெற தினமும் விட்டமின் மற்றும் மினரல் சத்து அவசியம். விட்டமின் டி தவிர்த்து மற்றவை முழுவதும் கற்றாழை ஜூஸில் அடங்கியுள்ளதால் உடல் போஷாக்கு உதவிடுகின்றது.
எப்படி குடிப்பது ?
20 மி.லி. கற்றாழை ஜெல்லை எடுத்து ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
கற்றாழையின் பயன்கள்
  • கற்றாழையின் பருக்களை நீக்க பயன்படுத்தலாம்.
  • எரிச்சல்கள் மற்றும் வெந்த புண்களுக்கு அதனை பயன்படுத்தலாம். இது சரும திசுக்களை வேகமாக சரிசெய்யும்.
  • இந்த செடியின் உட்புறத்தில் உள்ள ஜெல் போன்ற பகுதியை காயம் பட்ட இடத்தில் தடவ வேண்டும். இது எரிச்சலை குறைத்து, பாக்டீரியாவை எதிர்த்து போராடவும் செய்யும்.
  • சர்க்கரை வியாதி கட்டுக்குள் வரும்.
  • மஞ்சள் காமாலையை தடுக்க உதவிடும்.
  • கற்றாழை சருமத்தை வெளுப்பாக்கும். அதனால் சூரிய கதிர்களால் ஏற்படும் சரும டான் மற்றும் நிறம் மாறுதல் போன்றவற்றிற்கு இதனை பயன்படுத்தலாம்.
  • கற்றாழையின் ஜெல்லில் சருமத்தில் தடவினால், சருமத்திற்கு நீர்ச்சத்து கிடைத்து, அதன் மீள்தன்மையை அதிகரிக்கும்.
  • கற்றாழையின் ஜெல் சருமத்தில் ஏற்படும் சுருக்கத்தை தடுப்பதில் சிறந்தது.
  • சருமத்தில் படை, சிரங்கு, அரிப்பு போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்க கற்றாழை பெரிதும் உதவியாக இருக்கும்.
  • கற்றாழை அசிடிட்டி, இரைப்பை அழற்சி, குடல் அல்சர் மற்றும் அழற்சிகளை குணமாக்கும்.
  • கற்றாழை ஒரு மலமிளக்கியாக வேலை செய்வதால், அது உணவை உடைத்து, செரிமான பிரச்சனை ஏற்படாமல் தடுக்கிறது.
  • நம் உடலின் உட்புற வெளிப்புறத்திலுள்ள பல நுண்ணுயிர்களுக்கு எதிராக கற்றாழை போராடும்.
கற்றாழையில் அடங்கியுள்ள மருத்துவகுணங்கள்
  • கற்றாழையில் பாக்டீரியா எதிர்ப்பு குணங்களும், ஆன்டி-செப்டிக் குணங்களும் அதிகமாக உள்ளது.
  • கற்றாழையின் ஜெல்லில் அதிகப்படியான ஈரப்பதம் அடங்கியுள்ளது.
  • அழற்சிக்கு கற்றாழையை ஒரு நல்ல சிகிச்சை முறையாக பயன்படுத்தலாம்.
  • செரிமானத்திற்கு தேவையான பல நொதிகள் கற்றாழையில் அதிகம் அடங்கியுள்ளது
  • பாக்டீரியா, தொற்று, பூஞ்சை மற்றும் ஈஸ்ட் போன்றவைகளுக்கு எதிரான நுண்ணுயிர் எதிர்ப்பு குணம் கற்றாழையில் அடங்கியுள்ளது.

கற்றாழையின் அசர வைக்கும் மருத்துவகுணங்கள் - Reviewed by Author on May 21, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.