அண்மைய செய்திகள்

recent
-

நிலவின் மர்மமான பக்கங்களை ஆராயும் செயற்கைக்கோள்: வெற்றிரமாக விண்ணில் செலுத்திய சீனா -


நிலவின் மர்மமான பக்கங்களை ஆராய்ந்து பூமிக்கு தகவல் தெரிவிக்க, செயற்கைக்கோள் ஒன்றை சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.
Queqiao என்று பெயரிடப்பட்ட, 400 கிலோ எடைகொண்ட செயற்கைக்கோள் ஒன்றை, நிலவின் மர்மமான பக்கங்களை ஆராய சீனா விண்ணில் செலுத்தியுள்ளது.

சீன விண்வெளி நிலையமான சிசாங்கில் இருந்து, 4C எனும் ராக்கெட்டின் உதவியுடன் இந்த செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டதாக சீன தேசிய விண்வெளி நிர்வாகமான CNSA(China National Space Administration) தெரிவித்துள்ளது.
இந்த செயற்கைக்கோள், சுமார் 200 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள பூமி-நிலவு மாறும் சுற்றுப்பாதைக்குள் நுழைந்தது. அங்கிருந்து இந்த செயற்கைக்கோள் உச்சத்தை தொட வேண்டிய தூரம் 4,00,000 கிலோ மீற்றர் தொலைவு ஆகும்.

பூமி-நிலவு (L2) எனும் இரண்டாவது லாக்ராங்கியனைச் சுற்றியுள்ள ஒரு ஒளிவட்டச் சுற்றுப்பாதையில் Queqiao செயற்கைக்கோள் நுழையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பூமியிலிருந்து சுமார் 4,55,000 கிலோ மீற்றர் தொலைவு ஆகும்.
இதன் சுற்றுப்பாதையில் செல்லும் உலகின் முதல் தகவல் தொடர்பு செயற்கைக்கோள் Queqiao ஆக இருக்கும் என சீனாவின் செய்தி நிறுவனமான சினுவா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சீன விண்வெளி தொழில்நுட்ப அகாடெமியின் துணை தலைமை பொறியாளர் சென் ஸாங் கூறுகையில், ‘இச்செயற்கைக்கோள் பல்வேறு Antenna-களை சுமந்து செல்கிறது. இதில் ஒன்று, விண்வெளியில் எப்போதும் ஆய்வு செய்ய தகுந்த மிகப்பெரிய தகவல்தொடர்பு Antenna ஆகும். இது குடை போன்ற வடிவம் கொண்டது. இது 5 மீற்றர் சுற்றளவு கொண்டது.

பூமி-நிலவு அமைப்பின் L2 இடத்தைச் சுற்றியுள்ள சுற்றுப்பாதை ஒளிவட்டத்தில் இந்த செயற்கைக்கோள் ஒப்பீட்டளவில் சிறிய அளவிலான எரிபொருளுடனேயே சென்று தங்கியிருக்க முடியும். அதற்கு நிலவின் ஈர்ப்பு சமநிலைக்குதான் நாம் நன்றி கூற வேண்டும்.
ஆனால், நிலவின் இந்த செயற்கைக்கோள் திட்டம் சுற்றுப்பாதையில் நிலவுக்கு அருகே சென்று நிறுத்தப்பட ஏதுவாக பல தொழில்நுட்ப அனுசரிப்புகள் உள்ளிட்ட சவால்களை கடந்து வந்திருக்கிறது. நிலவு ஈர்ப்பும் இதற்கு சாதமாக அமைந்துள்ளது’ என தெரிவித்துள்ளார்.

மேலும், Queqiao செயற்கைக்கோள் தொடர்பாக சீன அரசின் செயற்கைக்கோள் செலுத்தும் திட்ட மேலாளர் ஸாங் லிகுவா கூறுகையில்,
‘நிலவின் மறுபக்கம் மென்மையான நிலம் என்று கூறப்படுகிறது. அப்பக்கத்தை ஆராய்ச்சி செய்யும் ஒரு முக்கிய அடியை சீனா இன்று எடுத்து வைக்கிறது. அதற்கான ஆய்வு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய முதல் நாடாக சீனா திகழ்கிறது’ என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்த ஆண்டின் முடிவில் நிலவின் மறுபக்க ஆய்வு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிலவின் மர்மமான பக்கங்களை ஆராயும் செயற்கைக்கோள்: வெற்றிரமாக விண்ணில் செலுத்திய சீனா - Reviewed by Author on May 24, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.