அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் இரண்டு பாடசாலைகளுக்கு பலாமரக்கன்றுகள் வழங்கிவைப்பு....

பலாத்தோட்டம் உருவாக்குதல் பழைய காலத்தின் 
சோற்று மரமாக அறியப்பட்ட பலாமரம்  குளிர்மைக்கும் உணவுக்கும்  மற்றும் மரமாகவும் பயன்படக்கூடிய அதிபெறுமதியான விருட்சமாகும்

வன்னிப்பிராந்திய பிரதிப்பொலிஸ்மா அதிபர் தேசப்பந்து தென்னக்கோன் அவர்களினால்  இன்று 09- 05- 2018 காலை மன்.முருங்கன் மகாவித்தியாலயத்தில்  கல்லூரி முதல்வர் தலைமையில் நடைபெற்றது.
 விருந்தினர்களாக
நானாட்டான்  பிரதேச செயலாளர்  மன்னார் வனவளப்பணிப்பாளர் பொலிஸதிகாரிகள் அரச அதிகாரிகள்  ஆசிரியர்கள் மாணவர்கள் மக்கள் என அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.

விருந்தினர்கள் உரையின் சாரம்சம்....
மன்னார் வளமான  மண்ணினைக்கொண்ட மாவட்டம் ஆனால் மழைவீழ்ச்சி தான் குறைவு அதனால் வெப்பமான மாவட்டமாக காணப்படுகின்றது  இச்சூழலிலும் இவ்வாறான பலாக்கன்று வழங்கும் செயற்பாடுகள் மூலம்  பசுமையான சூழலை உருவாக்குவதுடன் குழுமையாகவும்  வெப்பத்தினைக்குறைக்கும் அத்தோடு  உணவுக்காவும் பயன்படும் சிறந்த பழம் மருத்துவக்குணங்களும் அதிகம் உள்ளது.

\தமிழ்மக்களினை விட சிங்கள மக்கள் அதிகமாக பலாக்காய் மூன்று பருவங்களிலும் பழமான பின்பும் உணவுக்கு பயன்படுகின்றது.

500 பலாமரக்கன்றுகள் வைத்து தோட்டம் உருவாக்குதல் திட்டத்தின் அமைவாக முருங்கன் பாடசாலைக்கு 500 பலாமரக்கன்றுகளும் அதேபோல  உயிலங்குளம் பாடசாலைக்கு 500 பலாமரக்கன்றுகளும் வழங்கி வைக்கும் திட்டத்திற்கு  அமைவாக  முதல் கட்டமாக இச்செயற்பாடு இன்று நடைபெற்றது.
 இதே நிகழ்வில் பேண்ட் வாத்தியக்குழுவுக்கும் நடனமாடியமாணவிகளுக்கும் விருந்தினர்களால்  பரிசுகளும் வழங்கிவைக்கப்பட்டது.

KAJENTHIRAN
 



























மன்னாரில் இரண்டு பாடசாலைகளுக்கு பலாமரக்கன்றுகள் வழங்கிவைப்பு.... Reviewed by Author on May 09, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.