அண்மைய செய்திகள்

recent
-

பிறப்பு சான்றிதழில் தந்தையின் பெயர் குறிப்பிடப்படாத முதல் குழந்தை -


பிறப்பு சான்றிதழில் தந்தை பெயர் குறிப்பிடப்படாத முதல் இந்திய குழந்தை எனும் பெயரை தவிஷி பெரேரா எனும் பெண் குழந்தை பெற்றிருக்கிறது.
பிறப்பு சான்றிதழில் தகப்பன் பெயர் இருக்கும் இடத்தை வெறுமையாக விடும்படி சென்னை உயர்நீதி மன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பினை அவ்வளவு சுலபமாக இந்த பெண்குழந்தையின் தாய் பெற்று விடவில்லை. நீதிமன்றத்தில் இதற்காக இரண்டு முறை போராடிய பிறகே இந்த தீர்ப்பினை பெற்றார்.


சரண்ராஜ் மதுமிதா தம்பதியனரில் சரண்ராஜை விவாகரத்து செய்த மதுமிதா விந்து தானம் மூலம் செயற்கை கருவுறுதல் முறையில் கடந்த ஏப்ரல் மாதம் தவிஷியை பெற்றெடுத்திருக்கிறார்.

இதனை அடுத்து திருச்சி மாநகராட்சி விந்து தானம் பெற்றவராது பெயரான மனிஷ் மதனபால் மீனா என்பவரின் பெயரை குழந்தையின் தகப்பன் பெயராக சேர்த்தது. இதனை பார்த்து அதிர்ந்த மதுமிதா பிறப்பு சான்றிதழில் உள்ள தகப்பன் பெயரை நீக்கும் படி கூறினார். திருச்சி மாநகராட்சியோ பெயரில் திருத்தும் வேண்டுமானால் செய்யலாமே தவிர முழு பெயரை நீக்க முடியாது என்று கைவிரித்து விட்டது.
இதற்குப்பின் நீதிமன்ற உதவியை நாடிய மதுமிதாவுக்கு வருவாய் துறை அதிகாரிகள் மூலம் பெயர் திருத்தும் செய்ய உத்தரவிட்டது நீதிமன்றம்.
சான்றிதழ் திருத்தங்களை பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் அதிகாரிகள்தான் திருத்த முடியும் என்று வருவாய் துறை நீதிமன்றத்திடம் மறுத்துள்ளது.
இதன் பின் சென்னை உயர்நீதி மன்றத்தை நாடிய மதுமிதாவுக்கு தற்போது வெற்றி கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் தந்தை பெயர் அற்ற முதல் இந்திய குழந்தை எனும் பெயர் தவிஷி பெரேராவிற்கு கிடைக்க உள்ளது.
பிறப்பு சான்றிதழில் தந்தையின் பெயர் குறிப்பிடப்படாத முதல் குழந்தை - Reviewed by Author on May 22, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.