அண்மைய செய்திகள்

recent
-

14 ஆண்டுகளுக்குப்பின் சுவிட்சர்லாந்திற்கு வருகை தரும் போப்: வான்வழி போக்குவரத்தில் கெடுபிடி -


14 ஆண்டுகளுக்குப்பின் சுவிட்சர்லாந்திற்கு போப் வருகை தருவதையடுத்து வான்வழிப் போக்குவரத்து கட்டுப்பாடுகளைக் கடுமையாக்க சுவிட்சர்லாந்து முடிவு செய்துள்ளது.

ஜெனிவா அதிகாரிகள் கேட்டுக் கொண்டதையடுத்து ஃபெடரல் கவுன்சில் இந்த முடிவை எடுத்துள்ளது.
ஜெனிவா பகுதியில் பயணிகள் விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர்கள் ஆகியவற்றிற்கு மட்டும் இந்தக் கட்டுப்பாடுகள் பொருந்தும்.
ஜூன் 21 ஆம் திகதி காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டும் இந்த கட்டுப்பாடுகள் பயன்பாட்டில் இருக்கும்.



Keystone

ஜெனிவா சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படும் மற்றும் ஜெனிவாவுக்கு வருகை தரும் வர்த்தக விமானங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது.
போப் வருகையின்போது பாதுகாப்புக்காக 200 ராணுவத்தினரை சுவிஸ் ராணுவம் அனுப்புவதோடு, ஒழுங்கமைப்பு மற்றும் மருத்துவ உதவிக்குழு ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
போப் பிரான்சிஸ் ஜெனிவாவில் சுவிஸ் ஜனாதிபதியை சந்திப்பதோடு விமான நிலையத்தில் ஒரு ஆராதனையும் நடத்த இருக்கிறார்.
இதற்குமுன் 2004ஆம் ஆண்டு போப் இரண்டாம் ஜான் பால் பெர்ன்க்கு வருகை தந்தது குறிப்பிடத்தக்கது.
14 ஆண்டுகளுக்குப்பின் சுவிட்சர்லாந்திற்கு வருகை தரும் போப்: வான்வழி போக்குவரத்தில் கெடுபிடி - Reviewed by Author on June 09, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.