அண்மைய செய்திகள்

recent
-

வடக்கு, கிழக்கில் இரண்டு வருடங்களில் 62 பேர் தற்கொலை -


கடந்த இரண்டு வருடங்களில் நுண்கடன் திட்டத்தின் கொடுமை காரணமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மட்டும் 62 பேர் தற்கொலை செய்துகொண்டிருப்பதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் மேல் மாகாண சபை உறுப்பினரான பொறியியலாளர் சண் குகவரதன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு வெள்ளவத்தை சண்முகா விடுதியில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

இலங்கை மத்திய வங்கியிடம் இருந்து அனுமதி பெறாமலேயே ஒருசில நுண்நிதிக் கடன் நிறுவனங்கள் வடக்கு, கிழக்கு பகுதிகளில் கடன் பெறுவோருக்கு எந்தவித விளக்கத்தையும் அளிக்காமல் அதிக வட்டிக்கு கடனை வழங்கி வருகின்றன.
தமிழ்ச் சமூகத்தினரின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் சிறிய கடனை பெற்று அதனை மீளச் செலுத்த முடியாமல் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு தள்ளிவிடப்பட்டுள்ளனர்.

நுண்நிதிக் கடனை திருப்பிச்செலுத்த முடியாததை அடுத்து கிளிநொச்சி மாவட்டத்தில் 14 பேரும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 19 பேரும், கிழக்கு மாகாணத்தில் 19 பேரும், வவுனியா மன்னார் போன்ற மாவட்டங்களில் 10 பேருமாக மொத்தம் 62 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
காலி மாவட்டத்தில் நுண்நிதிக் கடன் திட்டத்தின் கீழ் மிகச் சிறப்பான திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தன. இருந்த போதிலும் வடக்கில் நுண்நிதிக் கடன் நிறுவனங்களின் போட்டிநிலை காரணமாக வருமானம் அல்லாத அல்லது முன்னாள் போராளிகள், கணவரை இழந்த விதவைகள் போன்றோரை இலக்கு வைத்து வழங்கப்படுகின்றன.

இறுதியில் கடனை செலுத்த முடியாமல் போகின்ற நிலை வரும் போது நேரம், காலம் பாராமல் காலை, மாலை, இரவு நேரங்களில் வீடுகளுக்கும், கோவில்களுக்கும், பாடசாலைகளுக்கும் சென்று கடனை வசூல் செய்வதுடன், உளரீதியிலான சித்திரவதை செய்வதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.


 ஒரு சில நுண்நிதி கடன் நிறுவனங்கள் மத்திய வங்கியின் அனுமதியை பெறுவதற்கு முன்னரே கடன்களை வழங்கி மக்களை பிரச்சினைக்கு உள்ளாக்கியுள்ளன.

வட்டி வீதங்களையும் தங்களுக்கு ஏற்ற வகையில் குறித்த நிறுவனங்கள் அதிகரித்து வழங்கியுள்ளன. ஒரு தமிழனான மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி கவனத்திற்கெடுத்து உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
உயிர்நீத்த நபர்கள் பெற்றுக்கொண்ட கடனை அவர்களது குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து வசூலிக்காமல் முற்று முழுதாக தள்ளுபடி செய்ய வேண்டும்.

ஏனையவர்களின் கடன் அளவு தொடர்பாக சுயமதிப்பீடு செய்து வட்டிகளை முற்றாக நீக்கிவிட்டு குறைந்த பட்சம் 5 வருடங்களாவது மீளச் செலுத்துவதற்காக அவர்களுக்கு கால அளவை வழங்க வேண்டும் என்று தெரிவித்தா.
 
வடக்கு, கிழக்கில் இரண்டு வருடங்களில் 62 பேர் தற்கொலை - Reviewed by Author on June 21, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.