அண்மைய செய்திகள்

recent
-

நைஜீரியாவிடம் சிங்க முகம் காட்டிய அர்ஜென்டினா -


ஃபிபா உலகக் கிண்ணம் தொடரில் நைஜீரியாவை 2-1 என்ற கோல் கணக்கில் வென்று நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது அர்ஜென்டினா.
மேஜிக்மேன் மெஸ்ஸி முதல் கோலை அடிக்க, கடைசி நிமிடத்தில் நைஜீரியாவின் சவாலை முறியடித்தது முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினா.
ஏ பிரிவில் இருந்து ரஷ்யா, உருகுவே, பி பிரிவில் இருந்து ஸ்பெயின், போர்த்துகல், சி பிரிவில் இருந்து பிரான்ஸ், டென்மார்க், டி பிரிவில் இருந்து குரேஷியா, ஜி பிரிவில் இருந்து பெல்ஜியம், இங்கிலாந்து ஆகியவை ஏற்கனவே அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
 

பிரிவு சுற்றில் கடைசி லீக் ஆட்டங்கள் நடந்து வருகின்றன. டி பிரிவில் இன்று நடந்த கடைசி லீக் ஆட்டங்களில் அர்ஜென்டினா, நைஜீரியா மற்றும் குரேஷியா, ஐஸ்லாந்து அணிகள் மோதிக் கொண்டன.
டி பிரிவில் நடந்த முதல் ஆட்டத்திலேயே அர்ஜென்டினாவுடன் 1-1 என டிரா செய்து ஐஸ்லாந்து அதிர்ச்சி கொடுத்தது.
குரேஷியா 2-0 என நைஜீரியாவை வென்றது. அர்ஜென்டினாவுக்கு 3-0 என்ற கோல் கணக்கில் அடுத்த அதிர்ச்சியை அளித்தது குரேஷியா. அதற்கடுத்த ஆட்டத்தில் நைஜீரியா 2-0 என ஐஸ்லாந்தை வென்றது.
இரண்டு ஆட்டங்களில் 2 வெற்றிகளைப் பெற்று, 6 புள்ளிகளுடன் குரேஷியா நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

நைஜீரியா 3 புள்ளிகளுடன் இருந்தது. ஐஸ்லாந்து மற்றும் அர்ஜென்டினா தலா 1 புள்ளியுடன் இருந்தன.
இந்த உலகக் கிண்ணம் தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வீரர்களில் அர்ஜென்டினாவின் மெஸ்ஸியும் ஒருவர்.
ஆனால், இதுவரை அவருடைய மேஜிக் பலிக்கவில்லை. ஒரு கோல் கூட அடிக்கவில்லை. ரொனால்டோ ஹாட்ரிக் உள்பட 4 கோல்களை அடித்துள்ளார். மற்றொரு நட்சத்திர வீரரான பிரேசிலின் நெய்மர் ஒரு கோல் அடித்தார்.
பிரிவு சுற்றுடன் வெளியேறும் கடைசி ஆட்டத்தில் எகிப்தின் சலா ஒரு கோல் அடித்தார். ஆனால், மெஸ்ஸி ஒரு கோல்கூட அடிக்காதது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

இன்று நடந்த ஆட்டத்தில் நைஜீரியாவை வென்றால் நாக் அவுட் சுற்று வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலையில் அர்ஜென்டினா களமிறங்கியது.
ஆட்டத்தின் 14வது நிமிடத்தில் மெஸ்ஸி கோலடிக்க அர்ஜென்டினா 1-0 என முன்னிலை பெற்றது.
இந்த உலகக் கிண்ணம் தொடரில் மெஸ்ஸியின் முதல் கோல் இதுவாகும். இதனிடையில் 51வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி மோசஸ் கோலடிக்க நைஜீரியா 1-1 என சமநிலையை உருவாக்கியது.
86வது நிமிடத்தில் ரோஜோ கோலடிக்க 2-1 என அர்ஜென்டினா வென்று, நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.






நைஜீரியாவிடம் சிங்க முகம் காட்டிய அர்ஜென்டினா - Reviewed by Author on June 27, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.