அண்மைய செய்திகள்

recent
-

சனியின் சந்திரன்களில் Enceladus இல் சிக்கலான சேதன மூலக்கூறுகள் கண்டுபிடிப்பு -


சனியின் 6வது பெரிய சந்திரன் என வர்ணிக்கப்படும் Enceladus இல் உயிரின இருப்பிற்கு சான்று பகிரும் பெரிய சேதன மூலக்கூறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடல் நீர் மேற்பரப்பில் இனங்காணப்பட்டிருந்த சேதனக் கூறுகள் செறிந்த இச் சிறிய படையானது நமது புவியின் கடற்பரப்பில் காணப்படும் காபன் மூலக்கூறை ஒத்திருப்பதே மிக ஆச்சர்யமான விடயம்.

இதிலிருந்து கடலின் ஆழமான பனிக்கட்டி படைகள் மீது கடல் வாழ்க்கைக்குரிய உயிரினங்கள் இருக்கலாம் என நம்பப்படுகிறது.
இதற்கு முன் சனியின் சிறிய சந்திரனில் எளிய சேதன மூலக்கூறுகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. அவை 50 அணுத்திணிவு அலகுடையதாகவிருந்ததுடன், குறைந்தளவிலான காபன் அணுக்களையே கொண்டிருந்தன.

தற்போதைய கண்டுபிடிப்பு தொடர்பாக தென்மேற்கு ஆய்வு நிலைய விஞ்ஞானி மற்றும் புவியியலாளர் Christopher Glein கூறுகையில்,
“இக் கண்டுபிடிப்பானது அதிர்ச்சி தரும் வகையிலுள்ளது, இம்முறை 200 அணுத்திணிவு அலகிலும் அதிகமான திணிவுடைய சேதனச்சேர்வைகளை கண்டுபிடிக்க முடிந்திருந்தது, இத்திணிவானது மெதேனின் திணிவிலும் 10 மடங்கு திணிவுடையது, கடல் பரப்பிலிருந்து வெளிப்படும் சிக்கலான சேதனக் கூறுகளைக் கொண்ட இச் சந்திரனானது புவிக்கப்பால் உணிரினங்களுக்குத் தேவையான எல்லா தேவைகளையும் நிவர்த்திசெய்யும் வகையிலுள்ளது” என கூறுகின்றார்.

இது தொடர்பான மேலதிக விடயங்கள் Nature எனும் ஆய்வுப் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.

சனியின் சந்திரன்களில் Enceladus இல் சிக்கலான சேதன மூலக்கூறுகள் கண்டுபிடிப்பு - Reviewed by Author on June 29, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.