அண்மைய செய்திகள்

recent
-

கிளிநொச்சி இந்துக் கல்லூரிக்கான வகுப்பறை கட்டடம் திறந்து வைப்பு -


கிளிநொச்சி இந்துக் கல்லூரிக்கான பாடசாலை வகுப்பறை கட்டடம் மற்றும் அதிபர் விடுதி ஆகியவற்றை கல்வி இராஜாங்க அமைச்சர் ராதாகிருஷ்ணன் திறந்து வைத்துள்ளார்.

குறித்த நிகழ்வு இன்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றதுடன், கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இராஜாங்க அமைச்சர் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளார்.

இதன்போது இந்த பாடசாலைக்கு விஜயம் மேற்கொண்ட இராஜாங்க அமைச்சர் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டடங்களை பாடசாலை பயன்பாட்டிற்கு கையளித்துள்ளார்.
நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், பொதுமக்கள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர். இதன்போது கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ராதாகிருஷ்ணன்,
பாடசாலை மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளிற்காக பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் 4 ஆண்டு திட்டத்தில் 70 ஆயிரம் மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் 6 ஆயிரம் மில்லியன் வடக்குக்கென ஒதுக்கப்பட்டுள்ளது. வடமாகாணத்தின் கல்வி வெறுமனே யாழ்ப்பாணம் மாத்திரம் என நாம் எடுத்துக்கொள்ள முடியாது. வன்னியில் உள்ள 3 மாவட்டங்கள் உட்பட கிளிநொச்சியையும் இணைத்து நான்கு மாவட்டமாக யோசிக்க வேண்டும்.
கிளிநொச்சியின் கல்வி தரம் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதற்காக அண்மையில் பிரதம மந்திரி இங்கு வருகை தந்தபோது, விசேட திட்டங்களிற்காக விசேட கூட்டங்களை ஏற்பாடு செய்திருந்தார்.
இதற்காக எமது செயலாளர் சென்றுள்ளார். எனவே ஏற்றதாழ்வில்லாது அனைவரும் சமமான கல்வி கற்பதற்கான ஏற்பாடுகள் இங்கு செய்யப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவிக்கையில்,
இலங்கையில் தமிழரசுகட்சி 60வதுகளில் அரசுடன் இணைந்து அமைச்சு பொறுப்புக்களை ஏற்றிருந்தது. ஆனால் அக்கால கட்டத்தில் எதையும் செய்ய முடியாது போனது.

அதேபோன்று இன்றும் மக்களினுடைய அபிவிருத்தி உள்ளிட்டவற்றை இரண்டு கண்களில் ஒன்றாக பார்க்கின்றோம்.
நாங்கள் இவ்வளவு விட்டுக்கொடுத்து அரசியல்தீர்வு பற்றி பேசிக்கொண்டிருக்கும் போதே முல்லைத்தீவிலும், திருகோணமலையிலும், வவுனியாவிலும், மன்னாரிலும் எமது காணிகள் பறிக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.

மேலும், இத்தனைக்கு மத்தியிலும் மாணவர்களாகிய நீங்கள் கல்வி தேடல் நோக்கி பயணிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கிளிநொச்சி இந்துக் கல்லூரிக்கான வகுப்பறை கட்டடம் திறந்து வைப்பு - Reviewed by Author on June 16, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.