அண்மைய செய்திகள்

recent
-

கிம் ஜாங் உன் - டிரம்ப் சந்திப்பு நடைபெறும் தீவு பற்றிய....


வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஆகியோரது சந்திப்பு நடைபெறும் சென்டோசா தீவு குறித்த சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளது.

டிரம்ப் மற்றும் கிம் ஜாங் உன் இடையிலான இந்த சந்திப்பு கேபெல்லா ஐந்து நட்சத்திர ஹொட்டலில் நடைபெற உள்ளது.
ஆனால் அமெரிக்க ஜனாதிபதிகள் இதுவரை தங்கிய ஷாங்கரி-லா ஹொட்டலில் டிரம்ப் தங்கலாம் எனவும், வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் சிங்கப்பூரின் செயின்ட் ரெஜிஸில் தங்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இவ்விரு ஹொட்டல்களும் பிரபலமான ஆர்ச்சர்ட் சாலையின் வணிகப்பாதையில் சென்டோசா தீவின் முக்கிய பகுதியில் அமைந்துள்ளன. சிங்கப்பூரை உருவாக்குகின்ற 63 தீவுகளில் சென்டோசாவும் ஒன்று.
19 ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷாரின் ஆட்சிக்கு முன்னதாக வணிகர்களும், வர்த்தகர்களும், கடற்கொள்ளையரும் கூட அடிக்கடி சந்திக்கிற இடமாக சென்டோசா தீவு திகழ்ந்துள்ளது.

1942ம் ஆண்டு பிரிட்டிஷ் காலனிய படைப்பிரிவுகள் சரணடைந்தபோது, சிங்கப்பூர் ஜப்பானிடம் தோல்வியடைந்தது.
இதனையடுத்து 18 முதல் 50 வயதுக்கு உட்பட்ட சீன ஆண்கள் வெவ்வேறான இடங்களுக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டு, சுட்டுக்கொல்லப்பட்டனர் அல்லது கடலில் எறியப்பட்டனர்.

1983 ஆம் ஆண்டு எண்ணெய் எடுக்கும் கப்பல் ஒன்று சுற்றுலா கேபிள் பாதையில் மோதி, அந்த கேபிள் பாதையில் ஓடிக்கொண்டிருந்த கார்களில் இரண்டு கடலில் விழுந்தன. 2000 ஆம் ஆண்டு தோனி கவிழ்ந்து 8 வது சிறுமி உயிரிழந்தார்.

கேபெல்லா உல்லாச விடுதியில் உள்ள பிரிமியர் கார்டன் கிங் அறைக்கு ஓர் இரவுக்கு 500 டொலரிலிருந்து,
3 படுக்கையறை மற்றும் தனி நீச்சல் குளம் உள்ள கர்னெல் மனோர் அறைக்கு ஓர் இரவுக்கு 7, 500 டொலர் வரை இந்த ஹொட்டலின் அறைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகின்றன.
சிங்கப்பூரின் மிகவும் கௌரவமிக்க குடியிருப்பு இடங்களான செனடோசா கோவ் இங்குதான் அமைந்துள்ளன.

கிம் ஜாங் உன் - டிரம்ப் சந்திப்பு நடைபெறும் தீவு பற்றிய.... Reviewed by Author on June 08, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.