அண்மைய செய்திகள்

recent
-

சம்பந்தன் நம்பி எதுவுமே நடைபெறவில்லை: பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடம் சீ.வி.விக்னேஸ்வரன்

தமிழர்களுக்கான அரசியல் தீர்வு கிடைக்குமென கடந்த 2016ஆம் ஆண்டு முதல் காத்திருந்தோம். இருந்தும், 2018ஆம் ஆண்டு நிறைவடைவதற்குள் ஒரு தீர்வினை அடைவோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் நம்பியிருக்கின்ற போதும் எதுவுமே இதுவரையில் நடைபெறவில்லை என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் கௌரிஸிடம் எடுத்துரைத்துள்ளார்.

யாழிற்கு விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் நேற்று இரவு முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் சந்திப்பு இடம்பெற்றது.
அந்த சந்திப்பின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் எனக்குமான சந்திப்பு சற்று வித்தியாசமானது. அரசாங்கத்திற்கு எதிராக எதுவும் சொல்லக்கூடாது. இணைந்து செயற்பட வேண்டும். குட்டையைக் குழப்புகிறீர்கள். அவ்வாறு நடந்துகொள்வது பிரச்சினைகளை ஏற்படுத்தும் அல்லவா என பல விடயங்களை பேசியுள்ளார்.

அரசை நம்பி 2016 ஒரு தீர்வினைப் பெறலாம் என நம்பியிருந்தோம். ஆவ்வாறே 2017 ஆம் ஆண்டும் நம்பினோம். இப்போது 2018 ஆம் ஆண்டு நிறைவடைவதற்கு முன்னர் ஒரு தீர்வினை அடைவோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின்தலைவர் கூறியுள்ளார். ஆனால், எதுவுமே இதுவரையில் நடைபெற்றதாகத் தெரியவில்லை.

அரசாங்கம் ஒன்றைக் கூறுகின்றது, மற்றொன்றைச் செய்கின்றது. ஆகவே, நடக்கும் உண்மைகளை எடுத்துக்காட்ட வேண்டிய அவசியம் எமக்கு இருக்கின்றது. அதனால் தான் பல விடயங்களை வெளிப்படுத்தியுள்ளேன்.
நாங்கள் எமது பிரச்சினையை எடுத்துக் கூறினால், சிங்கள மக்களுக்கு ஏன் கோபம் வர வேண்டுமென்று புரியவில்லை. எமது உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. பறிக்கப்பட்ட உரிமைகளை திருப்பித் தாருங்கள் என கேட்டால், சிங்கள மக்கள் எம்மோடு கோபப்பட வேண்டிய அவசியமில்லை.
ஜெனிவா அமர்வுகள் இடம்பெறவுள்ளன. அரசாங்கம் மிகவும் தாமதமாக தான் நடவடிக்கைகளை எடுப்பதாக அவர் ஏற்றுக்கொண்டார். சிறிய காலம் இருப்பதனால், செய்வதாக கூறிய விடயங்களை செய்ய வேண்டும். அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுத்து வருகின்றதாகவும், அதன் பிரகாரம், எந்தளவிற்கு அரசாங்கம் நடைமுறைப்படுத்துகின்றார்கள் என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டுமென்றும் உயர்ஸ்தானிகர் கூறினார்.

வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான விசாரணை செய்வதற்குரிய குழுக்கள் மக்களின் ஆதரவினைப் பெற்றிருக்க வேண்டுமென்றும் அவர் கூறினார். அவ்வாறான ஒரு குழு அல்லது நீதிமன்றக் குழு இலங்கையிலேயே ஏற்படுத்த முடியுமா என்பதனை சிந்தித்துப் பார்க்க வேண்டுமென்று கூறினேன்.

வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளேன் என்றார்.
சம்பந்தன் நம்பி எதுவுமே நடைபெறவில்லை: பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடம் சீ.வி.விக்னேஸ்வரன் Reviewed by Author on June 20, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.