அண்மைய செய்திகள்

recent
-

நான் ஏன் குள்ளமானனேன்! நடிகர் சிவகுமாரின் உருக்கமான காரணம் -


சிவகுமார் கல்வி அறக்கட்டளையானது கடந்த 39 ஆண்டுகளாக தகுதியான மாணவர், மாணவிகளை அடையாளம் கண்டு தனது அறக்கட்டளை மூலம் உதவி செய்து வருகிறது,

இந்நிலையில் இந்த ஆண்டுகான, ’சிவகுமார் கல்வி அறக்கட்டளையின்’ 39 ஆம் ஆண்டு நிகழ்வு , சென்னையில் நேற்று சிறப்பாக நடைபெற்றது.
இதில், நடிகர் சிவகுமார் பேசியபோது, இங்கு பரிசு வாங்கிய குழந்தைகள் அனைத்துமே நெசவு தொழிலாளி, தையல் தொழிலாளி குடும்பங்கள் என்று சொன்னாங்க. அதற்காக வருத்தப்பட வேண்டியதில்லை.
ஏனென்றால், நீங்கள் பார்த்த வறுமையைவிட, அதிகமாக பார்த்து வந்தவன் நான். சூர்யா அப்பா என்றவுடன் ஹீரோ என நினைத்துவிடாதீர்கள். நான் பிறந்தக் காலத்தில் பஞ்சம் உச்சத்தில் இருந்தது. உணவு தானியங்கள் விழையாது. காற்றாலை வைத்து தயாரிக்கப்பட்டது எங்கள் கிராமத்தில் உணவாக இருந்தது.

எங்க வீட்டில் கொஞ்சம் வசதில் என்பதால் அடிப்பிடிச்ச சோறு கிடைக்கும். மாடு இருந்ததால் சுத்தமான பால், தயிர் கிடைக்கும். அப்போது தங்கம் பவுன் 12 ரூபாய். அக்கா 3ம் வகுப்பு போகணும், அதுக்கு 3 ரூபாய் கொடுக்கணும். நான் 2ம் வகுப்பு போகணும், அதுக்கு 2 ரூபாய் கொடுக்கணும்.
பவுனில் பாதிவிலை வருகிறதோ என்று விதவைத் தாய், எங்க அக்காவின் படிப்பை நிறுத்திவிட்டார். பிறகு காலையிலேயே விடிவதற்கு முன்பு பருத்தி எடுக்கப் போகணும். அதை முடித்துவிட்டு பெரியம்மாவின் தோட்டத்துக்குச் சென்று பூக்களை பறித்து மாலையாக கட்டிமுடித்து கொடுத்துவிட்டு பள்ளிக்கூடத்துக்குப் போகணும்.

செருப்பு என்றால் என்னவென்று தெரியாது. எவ்வளவு தூரம் என்றாலும் நடந்தே தான் போக வேண்டும்.
தீபாவளி, பொங்கல் பண்டிகை எல்லாம் வரும். அப்போது புதுசா துணியெல்லாம் போட மாட்டோம். எஸ்.எஸ்.எல்.சி படிக்கும் போது குரூப் போட்டோ எடுக்க 5 ரூபாய் என்னால் கொடுக்க முடியவில்லை. எங்கம்மாவுடன் பிறந்தவர் தான் மாதம் 85 ரூபாய் அனுப்பி வைத்து சென்னையில் படிக்க வைத்தார்.

நான் ஏன் குள்ளமாக இருக்கிறேன் தெரியுமா...? நான் சென்னையிலிருந்த ரூமின் சைஸ் வெறும் 6 அடிக்கு 5 அடி மட்டுமே. அதுலயே முடங்கி இருந்ததால் இப்படி குள்ளமாக ஆகி விட்டேன். இதை நான் சிரிப்பதற்காக சொல்லவில்லை.. 7 வருடம் அதில் தான் இருந்தேன்.


நான் ஏன் குள்ளமானனேன்! நடிகர் சிவகுமாரின் உருக்கமான காரணம் - Reviewed by Author on June 19, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.