அண்மைய செய்திகள்

recent
-

தமிழ் மொழியில் பிரச்சினையா? இதோ அழையுங்கள்!


இலங்கையில் அரச கரும மொழிச் சட்டம் மீறப்பட்டால் உடனடியாக அழைப்பினை ஏற்படுத்தி முறைப்பாட்டினை தெரிவிக்க முடியும் என அரச கரும மொழிகள் அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

குறிப்பாக பல்வேறு இடங்களில் மொழிச் சட்டங்கள் மீறப்பட்டுவருகின்றன. இந்நிலையில் இது தொடர்பாக அவதானம் செலுத்தியுள்ள அரச கரும மொழிகள் அமைச்சு, அதற்கென்று புதியதொரு திட்டத்தினை கொண்டுவந்துள்ளது.

அதாவது, அரச அலுவலகங்கள் உட்பட்ட ஏனைய இடங்களில் தமிழ் மொழியில் எழுதப்படாமல் இருந்தாலோ அல்லது, தமிழ் மொழி தவறாக எழுதப்பட்டிருந்தாலோ உடனடியாக 1956 என்ற இலக்கத்திற்கு முறைப்பாட்டினை தெரிவிக்க முடியும்.

இதேவேளை, சமூக வலைத்தளங்களான, Face book, Whats app, IMO, Viber போன்றவற்றிலும் முறைப்பாட்டினை பதிவு செய்ய முடியும் என்று அறிவுறுத்தியுள்ளது.

தமிழ் மொழியில் பிரச்சினையா? இதோ அழையுங்கள்! Reviewed by Author on June 07, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.