அண்மைய செய்திகள்

recent
-

தேவையற்ற போட்டிகள் எதற்கு? சம்பந்தனும், விக்னேஸ்வரனும் மனம்விட்டு பேச வேண்டும்! -


தேவையற்ற போட்டிகளை தடுப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பும், வடக்கு முதல்வர் விக்னேஸ்வரனும் சந்தித்து பேச வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரித்தானியக் கிளை கேட்டுக் கொண்டுள்ளது.

தமிழ்த் தேசியக் சுட்டமைப்பினுடைய பிரித்தானிய கிளையின் சர்வதேச இணைப்பாளர் ஐ.தி.சம்பந்தன் வெளியிட்ட அறிக்கையில் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தற்போது தமிழ் மக்கள் பலயீனமுற்ற நிலையில் ஒற்றுமை இன்மையால் பல பாதிப்புகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் வடமாகாண சபை தேர்தல் முதல்வர் தெரிவு போட்டியை வளர்ப்பதற்கு இடமளிக்கக் கூடாது.
பல தீயசக்திகள் த.தே.கூட்டமைப்பையும் தமிழ் அரசுக் கட்சியையும் பிளவு படுத்துவதற்கு சூழ்ச்சிகளை மேற்கொள்வதை அனைவரும் அறிவார்கள். இந்தச் சூழ்நிலையிலிருந்து தப்புபவதற்கு வழியுண்டு. நாம் மிக விவேகமாக நடந்து கொள்ளவேண்டும்.

பிரித்தானியா கிளையானது புலம்பெயர் அமைப்புகளுடனும் தமிழர்களுடனும்; கலந்துரையாடியபோது பல கருத்துக்களை வெளியிட்டனர். எதிர்வரும் வடமாகாண சபைத் தேர்தலில் தேவையற்ற போட்டிகள் தவிர்க்கப்பட வேண்டும் என்பது அக்கலந்துரையாடலில் கலந்துகொண்டவர்களின் அபிப்பிராயமாகும்.

அதனடிப்படையில் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன், வடமாகாண சபை முதல்வர் விக்னேஸ்வரன் ஆகியோர் உடனடியாக நேரில் சந்நித்து பேச வேண்டும் என்பது அக்கலந்துரையாடலில் கலந்துகொண்டவர்களின் அபிப்பிராயமாகும்.
கடந்த வடமாகாண சபைத் தேர்தலில் விக்னேஸ்வரனை முதன்மை வேட்பாளராகக் கொண்டுவந்தவர் சம்பந்தன் என்பதை எவரும் மறுக்க முடியாது. விக்னேஸ்வரன் முதல்வராக வந்த பின்னர் கூட்டமைப்புடன் முரண்பட்டதையும மறைக்க முடியாது. அவருக்கு ஆலோசனை வழங்கிய சிலரால் விட்ட தவறை உணர்ந்து வடமாகாண சபையின் அபிவிருத்திக்காக உழைப்பேன் என்று உறுதியளித்த வருகின்றார்.

மனிதன் பிழைவிடுவது இயல்பு, அதைத்திருத்திக்கொள்பவன் பெரும் மனிதன் என்று தந்தை செல்வநாயம் அடிக்கடி கூறுவதுண்டு. அதன்பால் இருவரும் மனம் விட்டுப் பேச்சுக்களை நடத்தி கடந்தகால தவறுகளைத் திருத்திக்கொள்வது அவசியமாகின்றது.

அத்துடன் வடமாகாண சபையின் அடிப்படை நோக்கமான பொருளாதார அபிவிருத்திக்கு உழைப்பேன் என்று விக்னேஸ்வரன், சம்பந்தனுக்கு உறுதி அளிப்பாராயின் வடமாகாண சபைத் தேர்தலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்பதே புலம் பெயர்ந்தவர்களின் நிலைப்பாடாகின்றது.
எனவே சம்பந்தன் திரு.விக்னேஸ்வரன் ஆகிய இருவரும் உடன் சந்தித்து பேசவேண்டுமென்பதே புலம்பெயர் தமிழர்களினதும் பிரித்தானிய கிளையின் வேண்டுகோளாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தேவையற்ற போட்டிகள் எதற்கு? சம்பந்தனும், விக்னேஸ்வரனும் மனம்விட்டு பேச வேண்டும்! - Reviewed by Author on June 17, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.