அண்மைய செய்திகள்

recent
-

உலகக்கோப்பை 2018: கோடிக்கணக்கில் பரிசுகளை அள்ளிச்சென்ற அணிகளின் முழுவிவரம் -


உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கான பரிசுத் தொகை ரூ. 2, 700 கோடி ஒவ்வொரு அணிகளுக்கும் அவர்களது திறமைக்கேற்ற வகையில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

இதில், சாம்பியன் பட்டம் வென்ற பிரான்ஸ் அணிக்கு 255 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இறுதிப் போட்டியில் தோல்வியைத் தழுவி, இரண்டாம் இடம்பிடித்த குரோஷிய அணிக்கு 190 கோடி ரூபாய் கிடைத்தது.
மூன்றாவது இடம் பிடித்த பெல்ஜியம் அணிக்கு ரூ. 161 கோடியும், நான்காவது இடம் பிடித்த இங்கிலாந்து அணிக்கு ரூ. 148 கோடியும் கிடைத்தது.

காலிறுதியில், தோல்வியுற்ற உருகுவே, பிரேசில், ரஷ்யா மற்றும் சுவீடன் அணிகளுக்கு தலா 107 கோடி ரூபாய் வீதம் வழங்கப்பட்டது. அத்துடன், நாக்-அவுட் சுற்றில் வெளியேற்றப்பட்ட அர்ஜென்டினா, போர்ச்சுகல், ஸ்பெயின் உட்பட 8 அணிகளுக்கு தலா 80 கோடி ரூபாய் கிடைத்தது.

மேலும், லீக் சுற்றில் தோல்வியைத் தழுவி வெளியேறிய அனைத்து அணிகளுக்கும் தலா 50 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.

உலகக்கோப்பை 2018: கோடிக்கணக்கில் பரிசுகளை அள்ளிச்சென்ற அணிகளின் முழுவிவரம் - Reviewed by Author on July 17, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.