அண்மைய செய்திகள்

recent
-

இந்த அறிகுறிகள் உங்களுக்கு....ரத்த சர்க்கரையின் அளவு அதிகரிக்குதாம் -


நாம் உண்ணும் உணவில் இருந்து கிடைக்கும் குளுக்கோஸ் தான் நமக்கு சக்தியை தருகின்றது.

கணையம் இன்சுலின் என்ற ஹார்மோனையும், என்ஸைமையும் சுரக்கின்றது. என்ஸைம்கள் உணவை உடைக்கின்றன. இன்சுலின் அதனை குளுக்கோசாக திசுக்கள் எடுத்துக் கொள்ள செய்கின்றது.
கணையம் தேவையான அளவு இன்சுலினை சுரக்காவிடிலும் அல்லது திசுக்கள் இன்சுலின் செல்லாக்கத்திற்கு எதிர்ப்பாக இருப்பதால் திசுக்களில் குளுக்கோஸ் ஓடுது.

இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து வருவதனை நாம் சர்க்கரை நோய் என்கின்றோம்.
தொடக்கத்திலேயே இதன் அறிகுறிகளை தெரிந்து கொண்டு சரிசெய்தால் பிரச்சனைகள் இல்லாமல் வாழலாம்.

ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது என்பதை வெளிக்காட்டும் அறிகுறிகள் இவை தான்,
  • அடிக்கடி சிறுநீர் கழிப்பது, முக்கியமாக இரவு நேரங்களில்
  • கண்பார்வை திடீரென மங்க துவங்குவது
  • எந்த ஒரு விஷயத்திலும் சீராக கவனம் செலுத்த முடியாமல் போவது.
  • எவ்வளவு நீர் அல்லது நீர் பானம் உட்கொண்டாலும் வாயில் வறட்சியான உணர்வு
  • சிறு காயங்களாக இருந்தாலும், அது சரியாக நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்வது
  • வயிறு சார்ந்த கோளாறுகள் அடிக்கடி ஏற்படுவது
  • சருமத்தில் ஒருவிதமான அரிப்பு அல்லது எரிச்சல் இருப்பது
  • அடிக்கடி பசி எடுப்பது
  • தளர்ச்சி, நடுக்கம் போன்ற நரம்பு மண்டல கோளாறுகள் இருப்பது
  • தலைவலி, மூச்சு வாங்குவது
இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் கலந்து ஆலோசிப்பதே சிறந்தது, தொடக்க நிலையாக இருப்பின் தவறாமல் மருந்துகளை எடுத்துக் கொள்வதே சிறந்தது.

இந்த அறிகுறிகள் உங்களுக்கு....ரத்த சர்க்கரையின் அளவு அதிகரிக்குதாம் - Reviewed by Author on July 21, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.